அருள்மிகு
மங்களேஸ்வரி சமேத மங்களாங்குரேஸ்வரர் திருக்கோயில் பாலாமடை
தலைவாயில் மணி
ஆகமார்த்தம்
து தேவானாம் கமனார்த்தம் து ரக்ஷாஸாம்
குர்வே
கண்டாரவம் தத்ர தேவதாஹ்வான லக்ஷணம்
பொருள்:-
நான் இந்த மணியை அடிப்பது
என்னுள் புனிதமான இறைசக்தியால் என் உடல், மனம், ஆன்மா நிரம்பட்டும்.
அசுரசக்திகளும் துர்சக்திகளும் என்னுள் இருந்தும் இல்லாமலும் உள்ளவை நீங்கட்டும்.
நமது கோயில் சிவாச்சாரியார்
சிவமிகு ராஜாமணிபட்டர் மற்றும் நம் பாலாமடை கிராம வாசிகளின் நெடுநாளைய
பிரார்த்தனையால் நமது அருள்மிகு
மங்களேஸ்வரி சமேத மங்களாங்குரேஸ்வரர் திருக்கோயில் பாலாமடையில் வாயில் மணி
அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வருஷாபிஷேகத்தை ஒட்டி வருகிற மே மாதம் 29ம் தேதி இக்கோயில் வாயில் மணிக்கு பூஜைகள் செய்து
அன்றிலிருந்து ஒலிக்க இருக்கிறது. ஆகையால் மேற்படி வைபவத்தில் எல்லோரும் கலந்து
கொண்டு இறையருளிற்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
பாலாமடை கிராமவாசிகள்
கோயில் மணியானது பெரிய ஓசை
எழுப்பினும் அது மனதிற்கும் ஆன்மாவிற்கும் ஒரு இதத்தை வழங்குகிறது. மனது
இயற்கையாகவே ஒரு நிலைப்படுகிறது,
சமனப்படுகிறது. ஆம் அலை அலையாய் வரும் விசாரங்களும் துஷ்ட எண்ணங்களும் நீங்கி
சமனப்படுகிறது.
மணியோசை இறைவனை தொழுவதற்கு
நம்மை தயார்படுத்துகிறது. நாம் கோயிலுக்கு செல்லாவிட்டாலும் ஆஹா நம் கோயிலில்
உஷஸ்கால பூஜை நடக்கிறது, உச்சிகால பூஜை நடக்கிறது, அர்த்தஜாம பூஜை நடக்கிறது.
தினமும் நடக்கும் அபிஷேகம் நடக்கிறது, பிரதோஷகால பூஜை நடக்கிறது தீபாராதனை
நடக்கிறது என்று நமக்கு தெரிவிப்பதால் கோயிலுக்கு வந்தாலும் வரவில்லை என்றாலும்
அந்த நேரத்தில் இறை சிந்தனையை
தூண்டுவதற்கே கோயிலில் மணியை அசைத்து பிரணவ ஒலியை எழுப்புகிறார்கள்.
நமது முன்னோர்கள் பெரிய
பெரிய மணிகளை பல உலோகங்களின் கலவையினால் செய்து ஓங்காரம் பிரணவத்தின் நாதத்தை
அம்மணியின் நாதத்தின் மூலமாக எழுப்பி நம் உடலில் உள்ள ஏழு சக்கிரங்களை
தூண்டிவிட்டார்கள்.
ஓம் (அகார, உகார, மகார)
என்னும் பிரணவ ஒலி வேத மந்திரத்தின் ஆதாரம். ஆகையால் தான் யஜூர்வேத மந்திரத்தின்
நடு மத்தியத்தில் ஓம் உள்ளது. கோயில் மணியின் சப்தம் தீய சக்திகளை விரட்டி எங்கும்
நல்ல சக்திகளை நிரம்பச்செய்கிறது. அந்த ஓசை செல்லும் வழியெல்லாம் நல்ல
சக்திகளைகொண்டு சென்று நிரப்புகிறது.
ஆகம சாஸ்திரப்படி கோயில்
மணியானது 5 உலோக கலவையினால் செய்யப்படுகிறது. அவை முறையே செப்பு,
வெள்ளி, தங்கம், பித்தளை (முக்கியமான மணிக்குண்டான உலோகம்) மற்றும் இரும்பு. இந்த
உலோகங்கள் பஞ்ஜ பூதங்களை குறிப்பதாகும். இந்த உலோகக் கலவையில் உள்ள உலோகங்களில்
கூட்டுவதும் குறைப்பதும் இதன் நாத்தில் மாறுபாட்டை உண்டாக்கும். கோயில் மணியின்
த்வனியானது நமது உடலை தூய்மைபடுத்துவதுடன் கெட்ட சக்திகளையும் கிருமிகளையும்
அழிக்கிறது.
இத்தகு மணி பாலாமடை கிராம
வாசிகள் நமது அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களாங்குரேஸ்வரர் கோயிலில்
அமைத்துள்ளார்கள். இது அமைக்கப்பட்ட தூண்களின் உயரம் சுமார் 21 அடி மணியின் எடை சுமார் 152 கிலோ.
No comments:
Post a Comment