Tuesday, 2 July 2019
PALAMADAIYUM PUSHKARAMUM BOOK A HISTORICAL DOCUMENT OF PALAMADAI
பூஷ்கரமும்
பாலாமடையும் -- ஒரு வரலாற்று பதிவு
தாமிரபரணி தேவி: கொப்பூழ்
போன்ற அகன்ற சுனைகளையும், மூங்கில்
போன்று சிறுத்த தோளையும் உடைய பொதிகை
மலையின் முகடுகளில் இருந்து தோன்றிய திருமகள் என்று மாணிக்கவாசகர் திருவிளையாடல்
புராணத்தில் போற்றுகிறார். செல்லும் இடமெல்லாம் தாமிரபரணியானவள் பூமியை செழிக்க
செய்கிறாள். தாமிரபரணியின் புனிதத்ததைப் பற்றியும் தன்னில் நீராடுபவர்களின்
பாவங்களை போக்கும் ஆற்றல் பற்றியும் புராணங்களில் பலவிதமாக வர்ணிக்கப்படுகிறது.
தாமிரபரணி நதியைப் பற்றி பெருமையாக சங்க இலக்கியத்திலும், புறநானூறு, ராமாயணம்
மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் சொல்லப்படுகிறது.
புஷ்கரமும் பாலாமடையும்: இப்புத்தகம் ஒரு
வரலாற்றுப்பதிவாக(ஆவணமாக) புஷ்கரம் பற்றியும், பாலாமடை கிராம்ம் பற்றியும்
செய்திகளையும்,
நிகழ்வுகளையும் பதிவு செய்துள்ளேன். இதில்
புஷ்கர விழாவை நடத்துவதற்கு அதன் விழா நிர்வாகிகள், கிராமத்தினர் மேற்கோண்ட
கடினமான பணிகள், தாமிரபரணி ஆற்று நீர் படித்துறையில் குளிப்பதற்கு இசைவாய்
வருவதற்கு செய்த பகிரத ப்ரயத்தினம், உழவாரப்பணிகள், உணவுக்கூடம், விருந்தோம்பல்,
பொது சுகாதாரம் ஆகியவையை பற்றியும் உள்ளதை உள்ளபடி இப்புத்தகத்தில் பதிவு
செய்துள்ளேன். இராமாயண மகாபாரத இதிகாச பூராணங்கள், மகாகவி காளிதாசர், யம கீதை,
சங்க இலக்கியங்கள், மகாகவி நீலகண்ட தீக்ஷிதரின் சிவலிலார்ணவம் முதலியவை தாமிரபரணியை
எப்படி போற்றுகின்றன. மங்கள தீர்த்தப் படித்துறையின் மேன்மை,
மகாகவி நீலகண்ட தீக்ஷிதரின் வாழ்க்கை வரலாற்றில்
முக்கிய பகுதிகள், அவர் பாலாமடை கிராமத்திற்கு வருகை, பாலாமடை நீலகண்ட சமுத்திரம்
என அழைக்கப்பட்டதற்கான கல்வெட்டு சான்று,
ஸ்ருங்கேரி, சாராதாபீடம் தக்ஷிணாம்னாய ஸ்ரீ
மகாஸன்னிதானம் அபினவவித்யாதீர்த்தர்: மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை,
ஜெயந்தி பற்றி அவர் வழிகாட்டுதல்கள், ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அதிஷ்டானத்தில் காசி
விசாலாக்ஷி, காசிவிஸ்வநாதர் பிரதிஷ்டை, ஸ்ருங்கேரி மடம் அமைந்த நிகழ்வு, அதில்
நமது ஆசாரியர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் அவர்களின் பங்கு, பாலாமடையில்
இயங்கும் அரசுப்பள்ளியின் வரலாறு, இங்கு பார்க்கவேண்டிய இடங்கள் பற்றிய
செய்திகளும் தரப்பட்டிருக்கிறது. இவைகள் மட்டும் அல்லாது உதயநேரி பெருமாள் கோயில்,
காந்திமதி சமேத நெல்லையப்பர் (எ) அழகிய கூத்தர் கோயில், செப்பறை, அகிலாண்டேஸ்வரி
சமேத அக்னீஸ்வரர் கோயில், இராஜவல்லிபுரம் ஆகியவை பற்றியும் எழுதியிருப்பது இப்புத்தகத்தின்
சிறப்புகள்.
நாமும், நமது அடுத்த சந்ததியரும் புஷ்கரம்
பற்றியும் பாலாமடை பற்றியும் அறிந்து கொள்ள இப்புத்தகம் உதவும்.. இப்புத்தகம்
விற்று கிடைக்கும் வருவாய் இக்கிராமத்தின் கோயில்களுக்கும், கிராம மேம்பாட்டிற்கும்
செலவிடப்படும். பாலாமடை வாசிகள் அனைவரின் இல்லத்திலும் இப்புத்தகம் கட்டாயம்
இருக்க வேண்டும் என்பது என் எண்ணம் வேண்டுகோள்..
நமஸ்காரம்
அப்பைய கணபதி (எ) பா.கோ.கணேசன்
ஸ்ரீ கோபால க்ருஹம்,
ப்ளாட் 22, நெ.2, முதல் தெரு,ஏ.ஜீ.எஸ். காலனி,