Monday, 10 August 2026

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவருடைய படைப்புகள் மேலும் பாலமடை கிராமம் வரலாறு

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும் - ஆசிரியர் திரு பி. எஸ். கிருஷ்ணன், மூன்றவது பதிப்பு , 2023, மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் பவுண்டேஷன் வெளியிடு, விலை ரூ.120/-. நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும் புத்தக விமர்சனம் பா. கோ. கணேசன் வாசகர்களால் இப்புத்தகம் பதிப்பிக்கப்பட்ட இரண்டு முறையும் மிகுந்த, வரவேற்பை பெற்றது. இப்புத்தகம் அச்சிடப்பட்டு பலகாலம் ஆகியது. இப்புத்தகம் இன்று பலர் வேண்டியதாலும் இன்றைய தலைமுறை வடமொழி இலக்கியங்கள் மேல் ஆர்வம் கொண்டுள்ளதாலும் மூன்றவது பதிப்பாக மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் அறக்கட்டளை மீண்டும் பதிப்பித்துள்ளது. இந்நூலின் ஆசிரியர் திரு பி. எஸ். கிருஷ்ணன் அவர்கள் மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய சிறந்த படைப்புக்களை ஊன்றி படித்து அவருடைய ஒவ்வொரு படைப்பின் சிறப்பு அதன் ரசமான கவித்துவம், கவியின் ஆற்றாமை; வாழ்தல் வேண்டி, உழைத்து பெற்ற அறிவும் ஞானமும், கேவலம் அரசனின் நித்திரை கொள்ளும் நேரத்தில் சொல்லும் கதைகளுக்கு வீணாகிறதே என்ற ஆதங்கம் இவைகளை அழகாக இப்புத்தகத்தில் வடித்துள்ளார். கவியின் எண்ண ஓட்டம், அவர் பால்யத்தில்/யவ்வனத்தில்/முதுமையில் எப்பொழுது அந்த படைப்பு அவரால் உரு பெற்றிருக்க கூடும் என்பதை யூகித்து திரு பி. எஸ். கிருஷ்ணன் அவருக்கே உரித்தான சிறந்த நடையில் எழுதியுள்ளார். இந்நூல் மகா கவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் வாழ்ந்த காலத்தின் வரலாற்று பதிவு, இது உள்ளபடியே ஒரு ஆராய்ச்சி நூல். இந்த நூலினை ஊன்றி படித்து தங்கள் ஆராய்ச்சிக்கான தலைப்புகளை தேர்வு செய்து கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர் பலர். முடிவாக மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் என்ற ஒரு மஹா கவியின், ஒரு அரசியல் ஆசானின் வாழ்வியல் தத்துவத்தை, சமுதாய கண் கொண்டு பார்த்த ஒரு தீர்க்கதரிசியை, ஒரு பன்முகம் கொண்ட கவியை, பற்றி சிறப்பாய் *நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும்* என்ற புத்தகத்தில் திரு பி. எஸ். கிருஷ்ணன் நம் கண் முன்னே கொண்டுவந்துள்ளார் என்றால் அது மிகையாகாது. *-*-*-*-* புஷ்கரமும் பாலாமடையும் பா. கோ. கணேசன் ஆசிரியர் உரை இப்புத்தகம் ஒரு வரலாற்று பதிவாக (ஆவணமாக) புஸ்கரம் பற்றியும் பாலாமடை கிராமம் பற்றியும் செயதிகளையும் நிகழ்வுகளையும் பதிவு செய்ந்துள்ளேன். புஷ்கரம் 2018 அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை திருநெல்வேலி மாவட்டத்திலும் குறிப்பாக பலாமடையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. படித்துறை புனர்நிர்மாணம். தாமிரபரணி ஆற்று நீர் படித்துறையில் இசைவாய் வருவதற்கு செய்த பகிரத பிரயத்தனம், கோயில் உழவாரப்பணிகள், உணவுக்கூடம் விருந்தோம்பல் பொது சுகாதாரம் ஆகியவைகளை உள்ளது உள்ளபடியே பதிவு செய்ந்துள்ளேன். இராமாயண மகாபாரத இதிகாச புராணங்கள், மகாகவி காளிதாசர், எம கீதை, சங்க இலக்கியங்கள், மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரின் சிவலீலார்ணவம் தாமிரபரணியை எப்படி போற்றுகின்றன. மங்கள தீர்த்தத்தப் படித்துறையின் மேன்மை, மஹாகவி நீலகண்ட தீக்ஷிதரின் ஜாதகம், அவரை வாழ்க்கை வரலாற்றில் சில முக்கிய பகுதிகள், தீக்ஷிதர் பாலாமடை வருகை, பாலாமடை நீலகண்ட சமுத்திரம் என்று அழைக்கப்படுவதற்கு ஆன கல்வெட்டு சான்று, சிருங்கேரி சாரதா பீடம் தக்ஷிணாம்னாய ஸ்ரீ அபிநவவித்யா தீர்த்தர் அருளிய தாமிரபரணி ஸ்லோகம், மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜெயந்தி ஆராதனை பற்றி அவர் வழிகாட்டுதல்கள், அவர் அதிஷ்டானத்தில் காசிவிஸ்வநாதர் காசி விசாலாக்ஷி பிரதிஷ்டை பற்றிய செயதிகள் இப்புத்தகத்தில் அடங்கும். பாலாமடையில் ஸ்ரீ சிருங்கேரி மடம் அமைந்த நிகழ்வு; அதில் நமது ஆச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்தர் ஸ்வாமிகளின் பங்கு, பாலாமடையில் இன்றுள்ள நமது அரசு பள்ளி தோன்றியதில் நமது பலாமடை பெரியோர்களின் பெரிய பங்களிப்பு இப்புத்தகத்தில் உள்ளது. இதற்கு உழைத்தவர்கள் அரும்பணி நினைவுகூரப்பட்டுள்ளது. உதயனேரி பெருமாள், காந்திமதி சமேத நெல்லையப்பர் (எ) அழகிய கூத்தர் கோயில் செப்பறை, அகிலாண்டேஸ்வரி சமேத அக்னீஸ்வரர் கோயில் இராஜவல்லிபுரம் பற்றிய வரலாற்று செயதிகழும் இப்புத்தகத்தில் உள்ளது. நாமும் நமது அடுத்து வரும் சந்ததியினரும் பாலாமடை பற்றி தெளிவாய் அறிந்து கொள்ளவும். இப்புத்தகம் உதவும். மஹாகவி நிலகண்ட தீக்ஷிதர் பவுண்டேஷன் மஹாகவி நிலகண்ட தீக்ஷிதர் படைப்புக்களை புத்தகங்களாக அவ்வப்பொழுது வெளியிட்டு வருகிறது. இன்று இருப்பவர் நாளை இல்லை என்பதை இன்று நிதர்சனமாக உணர்ந்திருக்கிறோம். எனது வேண்டுகோள் நமது மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய சிறந்த படைப்புக்களை எல்லோரும் வாங்கி படித்து பயனுற வேண்டுகிறேன். தீக்ஷிதர் வம்சத்தை சேர்ந்தவர்கள் கட்டாயம் அவரது படைப்புக்களை படிக்காவிட்டாலும் வீட்டில் பூஜை அறையிலாவது வைத்து புஜிக்க வேண்டும். அது வாழ்வில் மேன்மையை அளிக்கும். மேலும் உங்களது ஆதரவு அவர் படைப்புக்களை மேலும் பதிப்பிக்க உதவும். மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் படைப்புகள் 1. சிவ லீலார்ணவம்- விலை Rs.250/- மதுரையில் நிகழ்த்திய இறைவனது 64 திருவிளையாடல்களை விவரிக்கும் ஒரு நூல். முற்றிலும் சமஸ்க்ரித மொழியில் உள்ளது இதற்கு விரிவுரை தமிழில் இல்லை. 2. கலி விடம்பனம் - விலை ரூ. 45/- மக்களின் மேல் உள்ள கலி பகவானின் தாக்கத்தை அழகாய் விவரிக்கும் ஒரு நூல். சமுதாய சிந்தனை, ஹாஸ்ய ரசம், விந்தை மனிதர், பிழைப்புக்காக பலர் கூறும் பொய்கள் பற்றி 400 வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். ஊன்றி படிக்கும் பொழுது சிரிப்போடு நமது சிந்தனையையும் தூண்டும் ஒரு நூல். கவிஞன் தனது நையாண்டி மற்றும் நகைச்சுவையால் மனித இயல்பு எப்போதும் ஒன்றுதான் என்பதை உறுதி செய்கிறார். இது பிரஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பு. தமிழில் ஸ்லோகம் மற்றும் உரை. 3. வைராக்கிய சதகம் - விலை ரூ. 90/- தீக்ஷிதர் சிறந்த கல்வி அறிவு பன்முகப்பட்ட வாழ்நாள் அனுபவம், மேலும் தன்னை உணர்ந்த நிலையில் இப்புத்தகம் அவரால் படைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது திண்ணம். வைராக்ய லக்ஷணத்தின் மகத்துவம் மற்றும் வைராக்கியத்தை எவ்வாறு பெறுவது என்பது பற்றி இப்புத்தகம் விரிவாகக் கூறுகிறது. தமிழில் ஸ்லோகம் மற்றும் உரை. 4. சபா ரஞ்சன சதகம் - Rs.90/- மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் அவையில் அமைச்சராக இருந்த பொழுது எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த புத்தகம் ஒரு ராஜ்ஜியத்தின் மேலாண்மை பற்றி பேசுகிறது. ஒரு நாடு எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும். அரசனுக்கு வழி காட்ட அரசவையில் சிறந்த குரு நல்ல அமைச்சர்கள், நீதி வழுவாது இருக்க தக்க சிந்தனையோடு வழிகாட்டும் வழிகாட்டிகள், கவிகள் வேண்டும். மேலும் நாடு முன்னேற்றமடைய விவசாயம், ராணுவம், கல்வி, சுகாதாரம், கலைஞர்கள், இசை, நாடகம், நாட்டியம் போன்றவையும் அவசியம் வேண்டும். இப்புத்தகத்தில் இவை அனைத்தும் ஓர் உயர் தத்துவத்தின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது. *தமிழில் ஸ்லோகம் மற்றும் உரை. 5. ராமாயண ஸார ஸங்க்ரஹ ரகுவீரஸ்த்வம் - Rs.60/- வால்மீகி ராமாயணம் தவிர பல்வேறு ராமாயணங்கள் உள்ளன. ஸ்ரீ ராமபிரானின் சரிதத்தை, பரம பாகவதர்களான ஸ்ரீ துளசிதாசர் கம்பநாட்டாழ்வார் போன்றவர்களும் தங்கள் கற்பனையுடன் ஒரு சில சிறு சிறு மாற்றங்களுடன் எழுதியுள்ளார்கள். சூர்யா புத்திரனான சுக்ரீவனால் அனுப்பப்பட்ட வானரங்கள் பல திக்குகளில் தேடின ஆனால் ராமா நீ சிவாம்சமாக அவதரித்த ஹனுமனை அல்லவா சீதையை தேடும் பொறுப்பை ஒப்படைத்தாய் என்று தீக்ஷிதர் தனக்கே உரித்தான முறையில் விவரிக்கிறார் இந்நூலை மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரும் பகவான் ஸ்ரீ ராமனை போற்றி துதிக்கும் வகையில் வசந்த திலகம் எனப்படும் விருத்தத்தில் படைத்துள்ளார். தமிழில் ஸ்லோகம் மற்றும் உரை. 6. சாந்தி விலாசம் ₹. 100/- இந்த புத்தகம் மனிதர்கள் தங்கள் ஆசைகளின் உந்துதலால் செய்யும் பாவங்களை தவிர்க்க உதவும் சாந்தி விலாசம். மஹாகவி ஸ்ரீ நீலகண்ட திக்ஷிதர் தானக்கே உரித்தான ஒரு நையாண்டி ஹாஸ்யம் சமுதாயத்தின் மீது அவருக்குள்ள அக்கறையை வெளிப்படுத்து -கிறார். சம்சார பந்தத்தில் இருந்து விடுபடும் மார்க்கத்தை காண்பிக்கிறார். சிறந்த வேதாந்த் சாரம் நிறைந்த படைப்பு. *தமிழில் ஸ்லோகம், ஆங்கிலத்தில் ஸ்லோகம் தமிழில் உரை மற்றும் ஆங்கிலத்தில் தமிழ் உரை மொழிபெயர்ப்பு. 7. புஷ்காரமும் பாலாமடையும் - Rs.150/-*. பா. கோ. கணேசன் முதல் பதிப்பு, 2019. தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹா புஷ்கரம் கொண்டாடப்படுகிறது, பாலாமடையில் எப்படி கொண்டாடப்பட்டது. மேலும் பாலமடை கிராமம் பற்றிய வரலாற்று உண்மைகள் மற்றும் பாலமடை கிராமத்தின் கர்ண பரம்பரை செவி வழி செய்திகள் கொண்டு தொடுக்கப்பட்ட ஒரு ஆவணம். பாலாமடை பெயர் காரணம், பாலமடை ஸ்ரீ நீலகண்ட சமுத்திரம் என்று அழைக்கப்படுவதற்கு உள்ள கல்வெட்டு செய்திகள் இந்த புத்தகத்தில் உள்ளது. நாமும் நமது அடுத்து வரும் சந்ததியினரும் தாமிரபரணி மற்றும் பாலாமடை பற்றி தெளிவாய் அறிந்து கொள்ளவும். மிகவும் இப்புத்தகம் உதவும். இது ஒரு ஆவணம். புத்தகங்கள் வேண்டுவோர் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி* P G Ganesan, 'Sri Gopala Gruham', Plot No.22, No.2, First Street, A G's Colony, Puzhuthivakkam, Chennai 600091.India, Cell:- 9444055318, email id: appaiah55@gmail.com

Mahakavi Sri Nilakanta Dikshithar's Works and Village Palamadai

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும் Sri Nilakanta Dikshitar and His Literary Works - Tamil Author: Mr. P. S. Krishnan Third Edition (2023) Published by the Mahakavi Nilakanta Dikshitar Foundation Price: ₹120 Book Review By P. G. Ganesan The first two editions of this book received an overwhelming response from readers. As they have long been out of print and there is renewed interest among today's generation in Sanskrit literature, the Mahakavi Nilakanta Dikshitar Foundation has brought out this third edition. The author, Mr. P. S. Krishnan, has thoroughly studied the finest works of Mahakavi Sri Nilakanta Dikshitar. In this book, he beautifully explains the uniqueness of each literary work, its poetic excellence, the poet's inner struggles, and his sorrow that the knowledge and wisdom he acquired through great effort were often reduced to entertaining a king during his leisure hours. Mr. Krishnan has also attempted to trace the poet's train of thought, suggesting whether a particular work may have been composed during his childhood, youth, or old age. He presents these ideas in his own distinctive and elegant style. This book is not merely a biography; it is an important historical record of the period in which Mahakavi Sri Nilakanta Dikshitar lived. It is, in essence, a scholarly research work. Many researchers have used this book as the basis for selecting their doctoral research topics and have earned Ph.D. degrees. In conclusion, it is no exaggeration to say that through Sri Nilakanta Dikshitar and His Literary Works, Mr. P. S. Krishnan vividly brings before us the life philosophy of a great poet, a political mentor, a visionary who viewed society with deep insight, and a multifaceted literary genius. Pushkaram and Palamadai Author's Note By P. G. Ganesan This book serves as a historical document recording the events, information, and significance of Pushkaram (a great celebration every 144 years for the Tamiraparani River of Tirunelveli originates in the western ghats and ends up at Bay of Bengal in the village of Punnaikayal) and the village of Palamadai. The Pushkaram festival was celebrated from 11 October to 22 October 2018 in Tirunelveli district all through the banks of Tamiraparani river from origin to end, especially in Palamadai. The book records the events, as they actually happened: * Reconstruction of the bathing ghats. * The enormous efforts made to ensure the smooth flow of Tamiraparani river water to the bathing ghats. * Temple renovation and volunteer service. * Community dining and hospitality. * Public health arrangements. The book also explains how the Ramayana, Mahabharata, Puranas, Mahakavi Kalidasa, the Bhagavad Gita, Sangam literature, and Mahakavi Sri Nilakanta Dikshitar's work Sivaleelarnavam praise the sacred Tamiraparani River. It further includes: * The greatness of the Mangala Theertham bathing ghat on the Northern bank on the Western side of Palamadai Village south of the Mahakavi Nilakanta Dikshithar’s Adhistanam (Reverred Holy Grave) and Goddess Mangaleswari and God Mangalankureshwarar Temple. * The horoscope of Mahakavi Nilakanta Dikshitar. * Important aspects of his life. * His visit to Palamadai. * Epigraphic evidence explaining why Palamadai came to be known as Nilakanta Samudram. * A Tamiraparani hymn composed by Jagadguru Sri Abhinava Vidyatirtha Mahaswamigal of the Sringeri Sharada Peetham. * Guidelines for celebrating Mahakavi Nilakanta Dikshitar Jayanti and Aradhana. * Information about the consecration of Kashi Viswanathar and Kashi Visalakshi at his Adhishtanam. * The establishment of the Sringeri Mutt at Palamadai and the role played by Jagadguru Sri Bharati Tirtha Mahaswamigal. * The contribution of Palamadai elders towards the origin and establishment of the present Government School in the village. * Historical accounts of Udayaneri Perumal Temple, Nellaiappar (Azhagiya Koothar) Temple at Chepparai, and Agneeswarar Temple with Akhilandeswari at Rajavallipuram. The book also remembers and honors those who contributed to these efforts. It is intended to help both the present and future generations gain a clear understanding of Palamadai and its rich heritage. The **Mahakavi Nilakanta Dikshitar Foundation** continues to publish the works of Mahakavi Nilakanta Dikshitar from time to time. Today we realize more than ever that life is uncertain. Therefore, I sincerely request everyone to purchase and benefit from reading the outstanding works of Mahakavi Sri Nilakanta Dikshitar. Those belonging to the Dikshitar lineage should, at the very least, keep his books in their home prayer room and worship them, even if they are unable to read them. It will bring spiritual upliftment. Your support will also help publish more of his invaluable works. --- Works of Mahakavi Nilakanta Dikshitar 1. Sivaleelarnavam – ₹250/- A Sanskrit epic describing the **64 divine acts (Thiruvilaiyadal)** performed by Lord Shiva in Madurai. The entire work is in Sanskrit and currently has no detailed Tamil commentary. 2. Kali Vidambanam – ₹45/- A brilliant satire describing the influence of the Kali age on humanity. Written nearly 300 - 400 years ago, it discusses social values, humor, human eccentricities, and the lies people tell for survival. It entertains while provoking deep thought. Its wit and satire demonstrate that human nature has remained unchanged across centuries. It has also been translated into French. Includes: Sanskrit verses with Tamil Literation and Tamil Commentary. 3. Vairagya Satakam – ₹90/- A profound philosophical work reflecting Dikshitar's scholarship, life experience, and spiritual realization. It explains the greatness of renunciation and how one can attain detachment. Includes: Sanskrit verses with Tamil Literation and Tamil Commentary/ 4. Sabha Ranjana Satakam – ₹90/- Believed to have been composed while Dikshitar served as a minister in the court of King Tirumalai Nayak of Madurai, Tamil Nadu, India. The book discusses principles of good governance, emphasizing that a prosperous kingdom requires: * A wise king * Learned ministers * Just advisors * Great poets * Agriculture * Military strength * Education * Healthcare * Arts * Music * Drama * Dance These are presented from a lofty philosophical perspective. Includes: Sanskrit verses with Tamil Literation and Tamil Commentary 5. Ramayana Sara Sangraha Raghuveerastavam – ₹60/- A devotional hymn summarizing the Ramayana. While many versions of the Ramayana exist, Dikshitar uniquely highlights Lord Rama's choice of Hanuman—an incarnation of Shiva—to search for Sita his Queen. Composed in the Vasantha Tilakam metre, it glorifies Lord Rama. Includes: Sanskrit verses with Tamil Literation and Tamil Commentary. 6. Shanti Vilasam – ₹100/- A philosophical work guiding readers away from sins driven by worldly desires. Dikshitar combines satire, humor, and concern for society while explaining the path to liberation from worldly bondage. A rich Vedantic masterpiece. Includes: * Sanskrit verses * English transliteration * Tamil commentary * English translation of the Tamil commentary 7. **Pushkaram and Palamadai** – ₹150 Author: P. G. Ganesan First Edition: 2019 This book documents the Maha Pushkaram, celebrated once every 144 years on the Tamiraparani River, and records how it was observed in Palamadai. It also presents: * Historical facts about Palamadai. * Traditional oral histories. * The origin of the village's name. * Epigraphic evidence explaining why it was called Sri Nilakanta Samudram This book serves as an important historical document for future generations to understand the heritage of Tamiraparani and Palamadai. For Book Orders P. G. Ganesan Sri Gopala Gruham Plot No. 22, No. 2, First Street A.G.'s Colony, Puzhuthivakkam Chennai – 600091, India Mobile: +91 94440 55318 Email: appaiah55@gmail.com

Saturday, 8 August 2026

Book Release Shanthi Vilasam & Endowment Lecture Vairaghya Sathagam of Mahakavi Sri Nilakanta Dikshithar at Madras Sanskrit College, Madras, Tamil Nadu, India

Endowment Lecture on the works of Mahakavi Sri Nilakanta Dikshithar Venue: Madras Sanskrit College, Madras Presided by: Dr Sri C. Hariharan, Principal, Madras Sanskrit College Book Release & Endowment Lecture: Dr Sri R Ramachandran Retd Prof Vivekananda College Chief Guest: Prof Sri V Kamakoti, Director, IIT Madras First Copy was also received by the IIT Director himself. I have given a link below for you to browse Link for viewing the Program in Youtube https://youtu.be/ywUTDwIDS4M?si=zwgT_I9BVRgAn5oZ

Endowment Lecture at Madras Sanskrit College on the Sabha Ranjana Sathakam a work of Mahakavi Sri Nilakanta Dikshithar by Prof Dr O R Devanathan

Venue: Madras Sanskrit College, Madras Date: 19th April, 2025 Presided by: Dr Shri Aruna Sundaram Endowment Lecture: Dr Shri O R Devanathan, Professor Madras Presidency College Topic : Sabha Ranjana Sathakam The link is provided below for you all to view the Lecture.

Monday, 13 April 2026

மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜெயந்தி Mahakavi Sri Nilakanta Dikshithar Jayanthi

*ஸ்ரீ குருப்யோ நமஹ* *மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய 432வது ஜெயந்தி வைபவம்* *வருகிற வைகாசி மாதம் 17ம் தேதி (31-05-26) ஞாயிற்றுக்கிழமை அன்று பௌர்ணமி திதி மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய 432வது ஜெயந்தி விழா* எப்பொழுதும் போல் பாலாமடையில் நடக்க இருக்கிறது. எல்லோரும் படிக்க எதுவாக அழைப்பிதழை இணைத்- திருக்கிறோம்.( தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ). இந்த வைபவத்தில் எல்லோரும் பெரும் திரளாக வந்திருந்து மகாகவியும் சித்தருமான திக்ஷிதரின் அருளை பெருமாறு கேட்டுக்கொள்கிரோம். *முழு நிலவின் கதிர்வீச்சால், தீக்ஷிதரின் சக்தி மிகுந்து அதிஷ்டானத்தில் விளங்கும்* இவருடைய ஜெயந்தி (பிறந்தநாள்) பௌர்ணமி தினத்தில் வருவதால் இதில் கலந்துகொள்பவர்க்கு கிட்டும் நன்மைகள்: ஆழ்ந்த மன அமைதி, ஆன்மீக ஆற்றல், முதிர்ச்சியான சித்தம், படைப்பாற்றல், உள்ளுணர்வு மற்றும் பிறரை ஈர்க்கும் காந்த சக்தி அதிகமாகும் என்று என் ஜோசிய நண்பர் கூறினார். முழு நிலவின் கதிர்வீச்சால், தீக்ஷிதரின் சக்தி மிகுந்து அதிஷ்டானத்தில் விளங்கும் என்று என் ஜோசிய நண்பர் கூறினார். நல்ல உயர்ந்த வேலையில் உள்ளவர் தலைமைத்துவ பண்புடனும் திகழ்வார்கள் என்றும் கூறினார். *ஒவ்வொரு பௌர்ணமியுமே சித்தர்கள் அதிஷ்டானத்தில் நல் அதிர்வு மிகுந்திருக்குமாம்*. அவருடைய ஜாதகம் கடினமான ஆராய்ச்சி செய்து நமது டிரஸ்டி டாக்டர் ஸ்ரீ பி எஸ் நடராஜன் அவர்கள் வெளியிட்டார் அதுவும் இணைத்துள்ளேன். அப்பையா பாலாமடை

Saturday, 14 February 2026

ஸ்ரீ Karpagambal - Sri Kapaleeswarar Thirukalyanam, Mylapore, Chennai, Tamilnadu, india

*மயிலையே கயிலை* *கயிலையே மயிலை* *ஸ்ரீ கற்பகம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் விவாஹம் மற்றும் உற்சவம் பங்குனி மாதம்* ஒரு விவாஹம் என்றால் அந்த விவாஹம் நடைபெறும் லக்கினத்தின் முஹூர்த்தம் நக்ஷத்ரம் முஹூர்த்த உதயாதி நாழிகையை இவ்வளவுக்கு மேல் இவ்வளவு நாழிகைக்குள் என்று பத்திரிகை எழுதுவதும் அதை ஒப்பு தாம்பூலம் மாற்றுவதற்கு முன்பும் கல்யாணத்திற்கு முன்பும் வீட்டு பெரியவர் அல்லது நன்கு வாசிப்பவர் வாசிப்பார். ( இப்பொழுது சில புரோகிதர்களே வாசிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.) ஸ்ரீ கற்பகம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் விவாஹம் பங்குனி மாதத்தில் நடக்க இருக்கிறது அதற்கு முன்னோடியாக *மாசி மாதம் லக்கின பத்திரிகை வாசிக்கப்படும்.* *இந்த நாள்* *26 பிப்ரவரி 2026 (குருவாரம்) அன்று மாலை 5:45 மணிக்கு மேல்* *"ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் பெருமானுக்கு"* *"விசேஷ மகா அபிஷேகம் மற்றும் திருக்கல்யாண லக்ன பத்திரிகை வாசித்தல் மற்றும் உள் பிரகாராத்தில் புறப்பாடு நடைப்பெறும்"* அனைவரும் வந்து கண்டு தரிசித்து இறைவனின் அருளை பெறவும். இந்த திருக்கல்யாண வைபவம் 10 நாட்கள் உத்சவமாக நடைபெறும். இது என் பால்யத்தில் மறக்க முடியாத நிகழ்வு அதிலும் நான்கு மாடவீதியிலும் ஸ்வாமியும் அம்பாளும் பவனி வரும் பொழுது வேத கோஷ்டி, பண்ணிசை, வாண வேடிக்கை, தலை சிறந்த நாதாஸ்வர கலைஞர்களும் மேளமும் கைலாயமாக காட்சி அளிக்கும். அப்பையா பாலாமடை

Tuesday, 1 July 2025

*ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும்* - *ஆசிரியர் திரு பி. எஸ். கிருஷ்ணன்*, மஹாகவி நிலகண்ட தீக்ஷிதர் பவுண்டேஷன் வெளியிடு, 2023, விலை ரூ. 120/-. *புத்தக விமர்சனம்* *நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும்* வாசகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்ற, பதிப்பிக்கப்பட்ட இரண்டு முறையும் பெற்றாதாலும், அது ஆச்சிடப்பட்டு பலகாலம் ஆகியதாலும் இன்றைய தலைமுறை வடமொழி இலக்கியங்கள் மேல் ஆர்வம் கொண்டுள்ளதாலும் மூன்றவது பதிப்பாக புத்தகம் மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது. இந்த முறை மஹாகவி நிலகண்ட தீக்ஷிதர் அறக்கட்டளையின் சார்பாக பதிப்பிக்கப்பட்டுள்ளது. *மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர்* அவர்களுடைய சிறந்த படைப்புக்களை ஊன்றி படித்து அவருடைய ஒவ்வொரு படைப்பின் சிறப்பு அதன் ரசமான கவித்துவம், கவியின் ஆற்றாமை, வாழ்தல் வேண்டி நமது உழைத்து பெற்ற அறிவும் ஞானமும், கேவலம் அரசனின் நித்திரை கொள்ளும் நேரத்தில் சொல்லும் கதைகளுக்கு வீணாகிறதே என்ற ஆதங்கம், கவியின் எண்ண ஓட்டம், அவர் பால்யத்தில்/யவ்வனத்தில்/முதுமையில் எப்பொழுது அந்த படைப்பு அவரால் உயிர் பெற்றிருக்க கூடும் என்பதை திரு பி. எஸ். கிருஷ்ணன் அவருக்கே உரித்தான சிறந்த நடையில் எழுதியுள்ளார். அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்று பதிவு, இது உள்ளபடியே ஒரு ஆராய்ச்சி நூல். இந்த நூலினை ஊன்றி படித்து தங்கள் ஆராய்ச்சிக்கான தலைப்புகளை தேர்வு செய்து கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர் பலர். முடிவாக மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் என்ற ஒரு மஹா கவியின் ஒரு அரசியல் ஆசானின் வாழ்வியல் தத்துவத்தை சமுதாய கண் கொண்டு பார்த்த ஒரு தீர்க்கதரிசியை, ஒரு பன்முகம் கொண்ட கவியை பற்றி சிறப்பாய் *நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும்* என்ற புத்தகத்தில் திரு பி. எஸ். கிருஷ்ணன் வடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது. *மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர்* அவர்களுடைய சிறந்த படைப்புக்களை *மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் அறக்கட்டளை* ( *Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation*) அவருடைய சிறந்த படைப்புக்களை புத்தகங்களாக வெளியிட்டு வருகிறது. இன்று இருப்பவர் நாளை இல்லை என்பதை இன்று நிதர்சனமாக உணர்ந்திருக்கிறோம். இத்தருணத்தில் எனது வேண்டுகோள் நமது மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய சிறந்த படைப்புக்களை எல்லோரும் வாங்கி படித்து பயனுற வேண்டுகிறேன். தீக்ஷிதர் வம்சத்தை சேர்ந்தவர்கள் கட்டாயம் அவரது படைப்புக்களை படிக்காவிட்டாலும் வீட்டில் பூஜை அறையிலாவது வைத்து புஜிக்க வேண்டும். மேலும் உங்களது ஆதரவு அவர் படைப்புக்களை மேலும் பதிப்பிக்க உதவும். *Works of Mahakavi Nilakanta Dikshitar* *Available Books* 1. *Shiva Leelarnavam Price ~Rs.300~ /- Rs.250/-* (Lord Shivas Thiruvilayadal at Madurai) without commentary. 2. *Kalividambanam Price Rs.45/-* (This Kalividambanam is a book dealing with the human nature.)The poet establishes that the human nature is always been the same with his sattire and humour. This book has been even translated to french) 3. *Vairaghya Sadakam Price Rs.90/-* (The poet should have written this book after he attained more knowledge and learning, experience, etc. and after realisation. The book deals elaborately on Vairaghya's Lakshana its greatness and how to acquire vairaghya) 4. *Sabha Ranjana Sadakam Price Rs.90/-* (It is supposed to be written when he was a Minister in the court of King Thirumalai Nayaka of Madurai. This book deals with Management of a Kingdom. How there will be a progress of the Kingdom and the citizens, how to manage a kingdom. A Royal Court should have Good Ministers to direct the King and Guru to Guide the King, the importance of intellectuals, artisans, poets, musicians etc are very well explained. It has an undercurrent of a high philosophy running underneath) *5. Ramayana Sara Sangraha Raghuveerastvam Rs.60/-* (There are various Ramayanas besides Valmiki Ramayana. Thulasidoss, Kambar, Ezhuthachan. his book is how the Poet Mahakavi Nilakanta Visualised the whole events of Ramayana.) All the above books except Sl. No. 1 has Sanskrit slokas with tamil transliteration and commentary in Tamil. *Pushkaramum Palamadaiyum* - Price Rs.150/- A book written and published by Sri P G Ganesan. ( நமது சிருங்கேரி ஜகதகுருக்கள் ஒரு சிறந்ததான அனுகிரக பாஷணம் இப்புத்தகத்திற்கு வழங்கி இருப்பது இதன் சிறப்பு ) This book deals on: Maha Pushkaram and Palamadai Village. Maha Pushkaram is celebrated every 144 years in Tamiraparani at Palamadai and also a document on Palamadai Village supported by Historical Facts and hearsay karna parampara facts on the village Palamadai. Our Sringeri Jagadguru's guidance in various aspects on Jayanthi of Nilakanta, Pradishta of Kasi Viswanatha and Visalakshi at the Adhistanam of Mahakavi Nilakanta Dikshitha and construction of a temple over the Adhistanam. Construction of Sankara Mutt at Palamadai. Articles of Eminent Personalities about Palamadai and Sankara Mutt. The coming up of a School by the efforts of P S Subbaier, P S Subramania Iyer, Brookbond Sri P S Nilakantan his brother P S Mahadevan and the exemplary work of Sri P.A. Chellappa, etc. The important places in Palamadai. Most of the matter will be totally new to several people as this is the first attempt in this direction. Our Acharya Maha Sanidhanam Sringeri Jagathguru Sri Sri Sri Narasimha Bharathi Swamigal's Tamiraparani Ashtakam, Mangalanayaki Ashtakam, Mangalanayaki Sthotram, Tamil Pann on Mangaleswari samedha Mangalankureshwarar, Chepparai Sri Sivagami Samedha Azhagiya Kuthar, Slokas of Appaiaya Dikshithar, viz., Abeethakujambalsthavam, Durgachandrakala Sthuthi,Marga Bandhu Sthuthi and more importantly excerpts from Mahakavi Nilakanta Dikshithar's famous Nilakanta Vijaya Champu( the Paramasiva taking Kalakoota Visham of Vasuki and became Nilakanta) - Devas and Rishi munees praising the glory of Paramashiva on the immemorable event (On the insistance of our Sannidhanam). Our Acharya's Guidance and his Ashirvadam was very much when the author started to write and publish the book. The author feels every Tirunelveli Citizen and especially all the Palamadai Citizens should have this book to know about the village and pass it on to the next generation. The proceeds of the book will be totally spent for the welfare measures of Palamadai and the Village Temples. For purchase of all the above books please contact: P G Ganesan 'Sri Gopala Gruham', Plot No.22, No.2, First Street, A G's Colony, Puzhuthivakkam, Chennai 600091.India Cell:- 9444055318