Monday, 13 April 2026
மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜெயந்தி Mahakavi Sri Nilakanta Dikshithar Jayanthi
*ஸ்ரீ குருப்யோ நமஹ*
*மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய 432வது ஜெயந்தி வைபவம்*
*வருகிற வைகாசி மாதம் 17ம் தேதி (31-05-26) ஞாயிற்றுக்கிழமை அன்று பௌர்ணமி திதி மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய 432வது ஜெயந்தி விழா* எப்பொழுதும் போல் பாலாமடையில் நடக்க இருக்கிறது. எல்லோரும் படிக்க எதுவாக அழைப்பிதழை இணைத்- திருக்கிறோம்.( தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் ).
இந்த வைபவத்தில் எல்லோரும் பெரும் திரளாக வந்திருந்து மகாகவியும் சித்தருமான திக்ஷிதரின் அருளை பெருமாறு கேட்டுக்கொள்கிரோம்.
*முழு நிலவின் கதிர்வீச்சால், தீக்ஷிதரின் சக்தி மிகுந்து அதிஷ்டானத்தில் விளங்கும்*
இவருடைய ஜெயந்தி (பிறந்தநாள்) பௌர்ணமி தினத்தில் வருவதால் இதில் கலந்துகொள்பவர்க்கு கிட்டும் நன்மைகள்: ஆழ்ந்த மன அமைதி, ஆன்மீக ஆற்றல், முதிர்ச்சியான சித்தம், படைப்பாற்றல், உள்ளுணர்வு மற்றும் பிறரை ஈர்க்கும் காந்த சக்தி அதிகமாகும் என்று என் ஜோசிய நண்பர் கூறினார்.
முழு நிலவின் கதிர்வீச்சால், தீக்ஷிதரின் சக்தி மிகுந்து அதிஷ்டானத்தில் விளங்கும் என்று என் ஜோசிய நண்பர் கூறினார்.
நல்ல உயர்ந்த வேலையில் உள்ளவர் தலைமைத்துவ பண்புடனும் திகழ்வார்கள் என்றும் கூறினார்.
*ஒவ்வொரு பௌர்ணமியுமே சித்தர்கள் அதிஷ்டானத்தில் நல் அதிர்வு மிகுந்திருக்குமாம்*.
அவருடைய ஜாதகம் கடினமான ஆராய்ச்சி செய்து நமது டிரஸ்டி டாக்டர் ஸ்ரீ பி எஸ் நடராஜன் அவர்கள் வெளியிட்டார் அதுவும் இணைத்துள்ளேன்.
அப்பையா பாலாமடை
Saturday, 14 February 2026
ஸ்ரீ Karpagambal - Sri Kapaleeswarar Thirukalyanam, Mylapore, Chennai, Tamilnadu, india
*மயிலையே கயிலை*
*கயிலையே மயிலை*
*ஸ்ரீ கற்பகம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் விவாஹம் மற்றும் உற்சவம் பங்குனி மாதம்*
ஒரு விவாஹம் என்றால் அந்த விவாஹம் நடைபெறும் லக்கினத்தின் முஹூர்த்தம் நக்ஷத்ரம் முஹூர்த்த உதயாதி நாழிகையை இவ்வளவுக்கு மேல் இவ்வளவு நாழிகைக்குள் என்று பத்திரிகை எழுதுவதும் அதை ஒப்பு தாம்பூலம் மாற்றுவதற்கு முன்பும் கல்யாணத்திற்கு முன்பும் வீட்டு பெரியவர் அல்லது நன்கு வாசிப்பவர் வாசிப்பார். ( இப்பொழுது சில புரோகிதர்களே வாசிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.)
ஸ்ரீ கற்பகம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் விவாஹம் பங்குனி மாதத்தில் நடக்க இருக்கிறது அதற்கு முன்னோடியாக
*மாசி மாதம் லக்கின பத்திரிகை வாசிக்கப்படும்.*
*இந்த நாள்*
*26 பிப்ரவரி 2026 (குருவாரம்) அன்று மாலை 5:45 மணிக்கு மேல்* *"ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் பெருமானுக்கு"* *"விசேஷ மகா அபிஷேகம் மற்றும் திருக்கல்யாண லக்ன பத்திரிகை வாசித்தல் மற்றும் உள் பிரகாராத்தில் புறப்பாடு நடைப்பெறும்"*
அனைவரும் வந்து கண்டு தரிசித்து இறைவனின் அருளை பெறவும்.
இந்த திருக்கல்யாண வைபவம் 10 நாட்கள் உத்சவமாக நடைபெறும்.
இது என் பால்யத்தில் மறக்க முடியாத நிகழ்வு அதிலும் நான்கு மாடவீதியிலும் ஸ்வாமியும் அம்பாளும் பவனி வரும் பொழுது வேத கோஷ்டி, பண்ணிசை, வாண வேடிக்கை, தலை சிறந்த நாதாஸ்வர கலைஞர்களும் மேளமும் கைலாயமாக காட்சி அளிக்கும்.
அப்பையா பாலாமடை
Subscribe to:
Comments (Atom)