Tuesday, 2 July 2019

Sringeri Acharyas Srimugam for Pushkaramum Palamadaiyum



PALAMADAIYUM PUSHKARAMUM BOOK A HISTORICAL DOCUMENT OF PALAMADAI


பூஷ்கரமும் பாலாமடையும் -- ஒரு வரலாற்று பதிவு
தாமிரபரணி தேவி: கொப்பூழ் போன்ற அகன்ற சுனைகளையும், மூங்கில் போன்று சிறுத்த  தோளையும் உடைய பொதிகை மலையின் முகடுகளில் இருந்து தோன்றிய திருமகள் என்று மாணிக்கவாசகர் திருவிளையாடல் புராணத்தில் போற்றுகிறார். செல்லும் இடமெல்லாம் தாமிரபரணியானவள் பூமியை செழிக்க செய்கிறாள். தாமிரபரணியின் புனிதத்ததைப் பற்றியும் தன்னில் நீராடுபவர்களின் பாவங்களை போக்கும் ஆற்றல் பற்றியும் புராணங்களில் பலவிதமாக வர்ணிக்கப்படுகிறது. தாமிரபரணி நதியைப் பற்றி பெருமையாக சங்க இலக்கியத்திலும், புறநானூறு, ராமாயணம் மகாபாரதம் மற்றும் புராணங்களிலும் சொல்லப்படுகிறது.
புஷ்கரமும் பாலாமடையும்:  இப்புத்தகம் ஒரு வரலாற்றுப்பதிவாக(ஆவணமாக) புஷ்கரம் பற்றியும், பாலாமடை கிராம்ம் பற்றியும்    செய்திகளையும், நிகழ்வுகளையும் பதிவு  செய்துள்ளேன். இதில் புஷ்கர விழாவை நடத்துவதற்கு அதன் விழா நிர்வாகிகள், கிராமத்தினர் மேற்கோண்ட கடினமான பணிகள், தாமிரபரணி ஆற்று நீர் படித்துறையில் குளிப்பதற்கு இசைவாய் வருவதற்கு செய்த பகிரத ப்ரயத்தினம், உழவாரப்பணிகள், உணவுக்கூடம், விருந்தோம்பல், பொது சுகாதாரம் ஆகியவையை பற்றியும் உள்ளதை உள்ளபடி இப்புத்தகத்தில் பதிவு செய்துள்ளேன். இராமாயண மகாபாரத இதிகாச பூராணங்கள், மகாகவி காளிதாசர், யம கீதை, சங்க இலக்கியங்கள், மகாகவி நீலகண்ட தீக்ஷிதரின் சிவலிலார்ணவம் முதலியவை தாமிரபரணியை எப்படி போற்றுகின்றன. மங்கள தீர்த்தப் படித்துறையின் மேன்மை,
மகாகவி நீலகண்ட தீக்ஷிதரின் வாழ்க்கை வரலாற்றில் முக்கிய பகுதிகள், அவர் பாலாமடை கிராமத்திற்கு வருகை, பாலாமடை நீலகண்ட சமுத்திரம் என அழைக்கப்பட்டதற்கான கல்வெட்டு சான்று,
ஸ்ருங்கேரி, சாராதாபீடம் தக்ஷிணாம்னாய ஸ்ரீ மகாஸன்னிதானம் அபினவவித்யாதீர்த்தர்: மகாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை, ஜெயந்தி பற்றி அவர் வழிகாட்டுதல்கள், ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அதிஷ்டானத்தில் காசி விசாலாக்ஷி, காசிவிஸ்வநாதர் பிரதிஷ்டை, ஸ்ருங்கேரி மடம் அமைந்த நிகழ்வு, அதில் நமது ஆசாரியர் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்த ஸ்வாமிகள் அவர்களின் பங்கு, பாலாமடையில் இயங்கும் அரசுப்பள்ளியின் வரலாறு, இங்கு பார்க்கவேண்டிய இடங்கள் பற்றிய செய்திகளும் தரப்பட்டிருக்கிறது. இவைகள் மட்டும் அல்லாது உதயநேரி பெருமாள் கோயில், காந்திமதி சமேத நெல்லையப்பர் (எ) அழகிய கூத்தர் கோயில், செப்பறை, அகிலாண்டேஸ்வரி சமேத அக்னீஸ்வரர் கோயில், இராஜவல்லிபுரம் ஆகியவை பற்றியும் எழுதியிருப்பது இப்புத்தகத்தின் சிறப்புகள்.
நாமும், நமது அடுத்த சந்ததியரும் புஷ்கரம் பற்றியும் பாலாமடை பற்றியும் அறிந்து கொள்ள இப்புத்தகம் உதவும்.. இப்புத்தகம் விற்று கிடைக்கும் வருவாய் இக்கிராமத்தின் கோயில்களுக்கும், கிராம மேம்பாட்டிற்கும் செலவிடப்படும். பாலாமடை வாசிகள் அனைவரின் இல்லத்திலும் இப்புத்தகம் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது என் எண்ணம் வேண்டுகோள்..
    நமஸ்காரம்
அப்பைய கணபதி (எ) பா.கோ.கணேசன்
ஸ்ரீ கோபால க்ருஹம், ப்ளாட் 22, நெ.2,  முதல் தெரு,ஏ.ஜீ.எஸ். காலனி,
புழுதிவாக்கம், சென்னை 600091. கைப்பேசி: 9444055318, 9789619437; email: appaiah55@gmail.com

Sunday, 23 June 2019

PALAMADAI ADIPOORAM FESTIVAL INVITATION


ஸ்ரீ மங்கள நாயகி சஹாயம்
மங்கலம் தரும் ஆடிப்பூரம்
அருள்மிகு மங்களேஸ்வரி ஸமேத மங்களாங்குரேஸ்வரர் திருக்கோயில், பாலாமடை (எ) ஸ்ரீ நீலகண்ட சமுத்திரம்
ஆடிப்பூரம் அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை. அன்று பூமியில் வாழும் அனைத்து ஊயிர்களையும் காக்க தேவி சக்தியானவள் பூமிக்கு வருவதாக சொல்லப்படுகிறது. “ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. பயிர்கள் செழித்து வளர விதை விதைக்க இந்த பருவம் ஒரு சிறந்த பருவம். மக்கட்பேறு இல்லாதவர்கள் அன்னையை இன்று ஆராதிப்பதால் அவர்கட்கு மக்கட்செல்வம் உண்டாகும்.
சக்தி ஸ்வருபமாகிய நம் மங்களேஸ்வரியை ஆடிப்பூரத்தன்று ஆராதிப்பது சகல் சௌபாக்கியங்களையும் தரும். இவ்வருடமும் பாலாமடையில் வழக்கம்போல் ஆடிப்பண்டிகை அன்னையின் அருளால் சிறப்பாய் கொண்டாடப்படும். ஆடிப்பண்டிகை என்பது நமது கலாசாரத்தின் ஒரு சிறப்பு.
பெரியாழ்வாரால் நந்தவனத்தில் துளசிச் செடி அருகில் இந்நாளில் ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டதால் இது அனைத்து வைணவ தலங்களிலும் ஒரு பெரிய விழாவாக உற்சவமாகவும், அதை தொடர்ந்து ஆண்டாள் கல்யாண உற்சவமும் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் ஆடிப்பெருக்கும் ஆடிப்பூரமும் ஒன்றாக வருவதால்
நாட்டின் நீர் வளம் பெருகும் திண்ணாமாய்
இந்த வருடம்  ஆடி மாதம் 18ம் தேதி (ஆகஸ்ட் 3ம் தேதி) சனிக்கிழமை வருவதால் இது வார விடுமுறை நாளாகவும் இருப்பதால் அனைவரும் பாலாமடை வந்திருந்து பெருந்திறளாக கலந்து கொண்டு ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரர் உடன் உறையும் அன்னை ஸ்ரீ மங்களேஸ்வரியின் அருளுக்கு பாத்திரராகும் படி பிரார்திக்கிறோம்.
பாலாமடை வருவதற்கு உங்கள் பிரயாண ஏற்பாட்டை செய்து கொள்ளுங்கள். அன்னை ஸ்ரீ மங்களேஸ்வரிக்கு சாற்றுவதற்கு வளையல், ரவிக்கை துணிகள், வரும் சுஹாசினிகளுக்கு, கன்னிப் பெண்களுக்கு, சிறிய பெண் குழந்தைகளுக்கு ஏதுவாக வாங்கி பாலாமடையில் அன்னைக்கு சாற்றியபின் வழங்குவது பாலாமடையில் வழக்கத்தில் உள்ளது. ஆகையால் அவரவர் இஷ்டப்படி கொண்டு வரவும். என்ன கொண்டு வர உத்தேசித்துள்ளிர், எவ்வளவு பேர் வருகை தர உள்ளிர்கள் என்பதை சிவமிகு ராஜாமணிபட்டர், திரு ரமணா, மற்றும் எனக்கும் தெரிவித்தால் திட்டமிட வசதியாக இருக்கும்.
பாலாமடை கிராம பொது ஜனங்கள்

PALAMADAI MANGALESWARI SAMEDA MANGALANKURESHWARAR TEMPLE BELL


அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களாங்குரேஸ்வரர் திருக்கோயில் பாலாமடை
தலைவாயில் மணி

ஆகமார்த்தம் து தேவானாம் கமனார்த்தம் து ரக்ஷாஸாம்
குர்வே கண்டாரவம் தத்ர தேவதாஹ்வான லக்ஷணம்
பொருள்:-
நான் இந்த மணியை அடிப்பது என்னுள் புனிதமான இறைசக்தியால் என் உடல், மனம், ஆன்மா நிரம்பட்டும். அசுரசக்திகளும் துர்சக்திகளும் என்னுள் இருந்தும் இல்லாமலும் உள்ளவை நீங்கட்டும்.

நமது கோயில் சிவாச்சாரியார் சிவமிகு ராஜாமணிபட்டர் மற்றும் நம் பாலாமடை கிராம வாசிகளின் நெடுநாளைய பிரார்த்தனையால் நமது அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களாங்குரேஸ்வரர் திருக்கோயில் பாலாமடையில் வாயில் மணி அமைக்கப்பட்டுள்ளது. கோயில் வருஷாபிஷேகத்தை ஒட்டி வருகிற மே மாதம் 29ம் தேதி இக்கோயில் வாயில் மணிக்கு பூஜைகள் செய்து அன்றிலிருந்து ஒலிக்க இருக்கிறது. ஆகையால் மேற்படி வைபவத்தில் எல்லோரும் கலந்து கொண்டு இறையருளிற்கு பாத்திரர்களாகும்படி கேட்டுக் கொள்கிறோம்.
இப்படிக்கு
பாலாமடை கிராமவாசிகள்

கோயில் மணியானது பெரிய ஓசை எழுப்பினும் அது மனதிற்கும் ஆன்மாவிற்கும் ஒரு இதத்தை வழங்குகிறது. மனது இயற்கையாகவே ஒரு நிலைப்படுகிறது, சமனப்படுகிறது. ஆம் அலை அலையாய் வரும் விசாரங்களும் துஷ்ட எண்ணங்களும் நீங்கி சமனப்படுகிறது.
மணியோசை இறைவனை தொழுவதற்கு நம்மை தயார்படுத்துகிறது. நாம் கோயிலுக்கு செல்லாவிட்டாலும் ஆஹா நம் கோயிலில் உஷஸ்கால பூஜை நடக்கிறது, உச்சிகால பூஜை நடக்கிறது, அர்த்தஜாம பூஜை நடக்கிறது. தினமும் நடக்கும் அபிஷேகம் நடக்கிறது, பிரதோஷகால பூஜை நடக்கிறது தீபாராதனை நடக்கிறது என்று நமக்கு தெரிவிப்பதால் கோயிலுக்கு வந்தாலும் வரவில்லை என்றாலும் அந்த நேரத்தில் இறை சிந்தனையை தூண்டுவதற்கே கோயிலில் மணியை அசைத்து பிரணவ ஒலியை எழுப்புகிறார்கள்.
நமது முன்னோர்கள் பெரிய பெரிய மணிகளை பல உலோகங்களின் கலவையினால் செய்து ஓங்காரம் பிரணவத்தின் நாதத்தை அம்மணியின் நாதத்தின் மூலமாக எழுப்பி நம் உடலில் உள்ள ஏழு சக்கிரங்களை தூண்டிவிட்டார்கள்.
ஓம் (அகார, உகார, மகார) என்னும் பிரணவ ஒலி வேத மந்திரத்தின் ஆதாரம். ஆகையால் தான் யஜூர்வேத மந்திரத்தின் நடு மத்தியத்தில் ஓம் உள்ளது. கோயில் மணியின் சப்தம் தீய சக்திகளை விரட்டி எங்கும் நல்ல சக்திகளை நிரம்பச்செய்கிறது. அந்த ஓசை செல்லும் வழியெல்லாம் நல்ல சக்திகளைகொண்டு சென்று நிரப்புகிறது.
ஆகம சாஸ்திரப்படி கோயில் மணியானது 5 உலோக கலவையினால் செய்யப்படுகிறது. அவை முறையே செப்பு, வெள்ளி, தங்கம், பித்தளை (முக்கியமான மணிக்குண்டான உலோகம்) மற்றும் இரும்பு. இந்த உலோகங்கள் பஞ்ஜ பூதங்களை குறிப்பதாகும். இந்த உலோகக் கலவையில் உள்ள உலோகங்களில் கூட்டுவதும் குறைப்பதும் இதன் நாத்தில் மாறுபாட்டை உண்டாக்கும். கோயில் மணியின் த்வனியானது நமது உடலை தூய்மைபடுத்துவதுடன் கெட்ட சக்திகளையும் கிருமிகளையும் அழிக்கிறது.
இத்தகு மணி பாலாமடை கிராம வாசிகள் நமது அருள்மிகு மங்களேஸ்வரி சமேத மங்களாங்குரேஸ்வரர் கோயிலில் அமைத்துள்ளார்கள். இது அமைக்கப்பட்ட தூண்களின் உயரம் சுமார் 21 அடி மணியின் எடை சுமார் 152 கிலோ.


Monday, 18 March 2019

MAHAKAVI NILAKANTA DIKSHITHAR JAYANTHI,MAY 19, 2019



श्रीमहागणपतये नम:   श्रीगुरुभ्यॊ नमश्रीचन्द्र्मौलीश्र्वराय नम:
सदाशिवसमारम्भां शंकराचार्य मध्यमां |
अस्मदाचार्य पर्यन्तां वन्दे गुरु परम्पराम् ||
अवतार: पराशक्त्या ड्त्याहुर्यं मनीषिण: |
नीलकण्ठमखीन्द्रं तं यतिवर्यं नमाम्यहम् ||
--
ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜயந்தி மஹோத்ஸவ பத்திரிகை
நிகழும் விகாரி வருஷம் வைகாசி மாதம் 5ம் தேதி (19-05-2019) ஞாயிற்றுக்கிழமை அன்று பிரதமை, அனுஷ நக்ஷத்திரத்தில் பாலாமடையில் யதீந்திராளின் அதிஷ்டானத்தில் வழக்கம் போல்  பக்தர்களின் உதவியைக் கொண்டு ருத்ரைதகாதசனி, வஸோர்த்தாரா ஹோமம், மஹாபிஷேகம், தீபாராதனை, ஸந்தர்பணம் முதலியவைகளுடன் வழக்கம் போல் “ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜயந்தி” மஹோத்ஸவம் நடைபெறும். பக்த ஜனங்கள் அனைவரும் மேற்படி வைபவங்களில் கலந்து கொண்டு ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களூடைய அனுக்ரகத்திற்கு பாத்திரர்களாகும்படி பிரார்த்திக்கிறோம்.
                                                                                                                                                                                                                                                 இப்படிக்கு
                         ஜயந்தி / ஆராதனை விழா குழுவினர்
 பி.கு. உங்கள் நன்கொடைகளை ஆராதனை விழாகுழுவின் கிழ்கண்ட நபர்களின் ஒருவர் பெயருக்கு அவர்களின் முகவரிக்கே:- கேட்பு வரைவோலை (Demand Draft), காசோலை (Cheque) அல்லது அஞ்சல் பண ஆணை (Money Order) ஆகவோ அனுப்பி உங்கள் ஒத்துழைப்பை எப்பொழுதும் போல் நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
Sri P G Ganesan
“Sri Gopala Gruham”, Plot 22, No.2, First Street,
A Gs Colony Puzhuthivakkam,
Chennai 600 091.
Cell: 9444055318 email: appaiah55@gmail.com
Sri  P K Seshadrinathan ,
Flat No.1, “Saravanabhava”,
9, 2nd Cross Street,
R A Puram,
Chennai 600 028.
Cell:9841017884 email:pksesh24@gmail.com
Sri G Venkataraman
T-1, Manasa, 3rd Floor,
5 Subramanian Street,
West Mambalam,
Chennai 600 033
Cell: 9841040843
For Electronic Transfer(NEFT)
Sri  P K Seshadrinathan,
SB Ac No.000901639983
Bank: ICICI Bank, Nungambakkam Branch
IFS Code: ICIC0000009

Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation
Flat No.1, Saravana Bhava, 9, 2nd Cross St, 1, R A Puram, Chennai 600 028
V Sankaran              P K Seshadrinathan                   P  G Ganesan
President               Secretary                                Treasurer

Board of Trustees
Dr. P S Natarajan, P S Ananthanarayanan, V. Sankaran, P M Ramachandran, G Venkataraman, 
P K Seshadrinathan, Prem Shankar, P S Ganapathy, P G Ganesan,  
P K Ganapathy, P K Sundaresan & P S Magesh
--
About our Foundation
Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation was established with a view to perpetuating the memory of the great Saint-Poet-Statesman of the seventeenth century who was a minister to the great Thirumalai Naickan of Madurai. Sri Nilakanta Dikshithar is believed to have experienced Saakshathkara of  Divine Mother Meenakshi. He needs no introduction to scholars, students and lovers of Sanskrit. He was undoubtedly the most notable figure in the field of Sanskrit letters of the seventeenth century. His works have been translated in several languages and they have been cited in several literary books and magazines.
Donations to the foundation are eligible for exemption under section 80(G) of the Indian Income Tax Act, 1961 (This is only available to people who pay taxes in India). Crossed cheques or drafts in favour of "The Mahakavi Sri Nilakanta Dikshithar Foundation" may be sent to any of the following addresses:

1.      P K Seshadrinathan, Secretary, Mahakavi  Sri Nilakanta Dikshithar Foundation, Flat 1, Saravana Bhava,   9 Second Cross Street, R A Puram, Chennai 600028. Email: pksesh24@gmail.com, Cell: +91 9841017884.
2.      P G Ganesan, Treasurer, Mahakavi Sri  Nilakanta Dikshithar Foundation, ‘Sri Gopala Gruham’, Plot No.22, No.2, First Street, A Gs Colony, Puzhuthivakkam, Chennai 600 091. Email: appaiah55@gmail.com, Cell: +91 9444055318.

Please find on the back side of this letter our invitation for the Mahakavi Nilakanta Dikshithar Jayanthi which falls on 19th May, 2019. Your offerings to that purpose may be sent to the list of persons pasted below the invitation.
                                                                                   
                                                                                                     V. Sankaran
                                                                                                     President
                                                                            Mahakavi Nilakanta Dikshithar Foundation

Wednesday, 2 January 2019

DISCOURSE BY SHRI TIPPIRAJAPURAM SHRI MOHAN RAMA DIKSHITHAR


மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் பவுண்டேஷன்
இடம் - பாலாமடை

திப்பிராஜபுரம்
ஸ்ரீ மோஹன் ராம தீக்ஷிதர்
(சேங்காலிபுரம் ப்ரும்ஹ ஸ்ரீ. அனந்தராம தீக்ஷிதர் அவர்களின் பேரன்)


ஸ்ரீமத் வால்மீகி ராமாயணம்
அயோத்யா காண்டம்
ப்ரவசனம்
(சில முக்கிய நிகழ்வுகள்)

கீழ்கண்ட நிகழ்ச்சி நிரலின் படி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.  இந்த உபன்யாசத்தின் பொழுது நமது முன்னோர்களான ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ அப்பைய தீக்ஷிதர் மற்றும் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர்களுடைய படைப்புகள் பற்றியும் ஸ்ரீ.மோஹன் ராம தீக்ஷிதர் சொல்ல இருக்கிறார்.

தேதி
இடம் – நேரம்
தலைப்பு
11.01.2019 - வெள்ளி
சங்கர மடம்: மாலை
 3 முதல் 5 மணி வரை
ஸ்ரீ ராம கல்யாண குணானுகதனம் கைகேயீ வரதானம்
12.01.2019 - சனி
சங்கர மடம்: மாலை
 3 முதல் 5 மணி வரை
கௌஸல்யை ஆசீர்வாதம்,
ஸ்ரீராம வநகமனம்
13.01.2019 - ஞாயிறு
சங்கர மடம்: மாலை
 3 முதல் 5 மணி வரை
ஸ்ரீ பாதுகா பட்டாபிஷேகம்

ஆஸ்திக பெருமக்கள் அனைவரும் கலந்து கொண்டு
பகவத்கிருபையை பெறவும்.
                                          
மா ரமணம் உமா ரமணம்

MAHAKAVI SRI NILAKANTA DIKSHITHAR
FOUNDATION
Place - Palamadai

Tippirajapuram
Sree Mohan Rama Dikshithar
(Grand Son of Sengalaipuram Anantharama Dikshithar)

Sreemath Valmiki Ramayanam
Ayodhya Kaandam
Discourse
(Important Instances)

The program is given below. During his discourse, Sri Mohan Rama Dikshithar will also narrate some important instances on the works of Sri Sri Sri Appaya Dikshithar and Sri Sri Sri Nilakanta Dikshithar.

Date
Venue & Time
Discourse Title
11.01.2019 - Friday
Sankara Mutt
Time
3 pm to 5 pm
Sree Rama Kalyana Gunanukathanam & Kaikeyee Varadhanam (Boon)
12.01.2019 - Saturday
Sankara Mutt
Time
3 pm to 5 pm
Kaousalya Ashirvadham (Blessings) & Sree Rama Vanagamanam (His departure to Forest)
13.01.2019 – Sunday
Sankara Mutt
Time
3 pm to 5 pm
Sree Padhuka Pattabhishekam  (Coronation of Sri Rama Footwear)

We invite all to participate and receive the blessings of the Divine

Ma Ramanam Uma Ramanam