Wednesday, 30 December 2015

Thirukalyanam - Mangaleswari sameda Mangalankureshwarar
From 28th January 2016
All are invited. Detailed program will be posted shortlyy

Friday, 30 October 2015

ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை மஹோத்ஸவ பத்திரிகை

நிகழும்  மன்மத வருஷம் கார்த்திகை மாதம்  29 ம் தேதி  (15.12.15) முதல்  மார்கழி  2ம் தேதி வரை (18.12.15)பக்தர்களின் உதவியைக்கொண்டு ருத்ரைகாதசனி, வஸோர்த்தாரா ஹோமம், உபநிஷத்பாராயணம், மஹாபிஷேகம், தீபாராதனை, ஸந்தர்பணம் முதலியவைகளுடன் வழக்கம் போல் "ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை" பாலாமடையில் உள்ள அவரது அதிஷ்டானத்தில் கீழ்க்கண்ட நிகழ்ச்சி நிரல் படி நடைபெறும். பக்த ஜனங்கள் அனைவரும் இவ்வைபவங்களில் கலந்துகொண்டு ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய அனுக்கிரகத்திற்கு பாத்திரர்களாகும்படி பிரார்த்திக்கிறோம்.        
தேதி
கிழமை
நேரம்
இடம்
நிகழ்ச்சி
15.12.2015
செவ்வாய்
காலை 8 மணி மாலை 3.30 மணி
அதிஷ்டானம், கோயில்
சங்கல்பம், தொடர்ந்து மூன்று வேத பாராயணம்


மாலை 6 – 7 மணி
சங்கர மடம்
இந்த்ராக்ஷி, சிவகவசம், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம்**
16.12.2015
புதன்
காலை 8 மணி மாலை 3.30 மணி
அதிஷ்டானம், கோயில்
மூன்று வேத பாராயணம்


மாலை 6 – 7 மணி
சங்கர மடம்
இந்த்ராக்ஷி, சிவகவசம், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம்**
17.12.2015
வியாழன்
காலை 8 – 12.30 மணி
அதிஷ்டானம்
ருத்ரைகாதசினி,  வஸோரத்தார ஹோமம்


காலை 8 மணி மாலை 3.30 மணி
கோயில், சங்கர மடம்
மூன்று வேத பாராயணம்


மாலை 6 – 7 மணி
சங்கர மடம்
இந்த்ராக்ஷி, சிவகவசம், விஷ்ணு ஸஹஸ்ர நாமம் பாராயணம்**
18.12.2015
வெள்ளி
காலை 9.30 முதல்
அதிஷ்டானம், சங்கர மடம்
ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஆராதனை
** இந்தராக்ஷி துர்கையை பற்றியது நாரதரால் இந்திரனுக்கு உபதேசம் செய்யப்பட்டது. சிவ கவசம் ரிஷப தேவரால் பத்ராயுவிற்கு உபதேசிக்கப்பட்டது (ஸ்காந்த புராணம்). நம் பல பிரச்சினைகளை தீர்க்க வல்லது. விஷ்ணு சஹஸ்ரநாமம் ஸ்ரீ வேதவியாசரால் இயற்றப்பட்டது. நமது ஆசாரியார் சங்கராசாரியார் இதற்கு உறையை அவரூடைய குரு கோவிந்த பாதரின் வேண்டுகோளின்படி எழுதினார் என்பர் (இந்த பாஷ்யமே அவருடைய முதல் பாஷ்யமாக சொல்வர்).  எல்லோரும் இதற்கு உண்டான புத்தகம் மற்றும் அதற்குண்டான அப்பியாசத்துடன் வந்தால் சேர்ந்து சொல்வதற்கு ஏதுவாக இருக்கும்.

உங்கள் நன்கொடைகளை ஆராதனை விழாகுழுவின் கிழ்கண்ட நபர்களின் ஒருவர் பெயருக்கு அவர்களின் முகவரிக்கே: கேட்பு வரைவோலை (DD), காசோலை(Cheque), அஞ்சல் பண ஆணை(MO), NEFT மின் அஞ்சல்வழியாகவோ அனுப்பி உங்கள் ஒத்துழைப்பை எப்பொழுதும் போல் நல்குமாறு வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
                                                                                                                                                            இப்படிக்கு,
                                                                                                                                                ஆராதனை விழா குழுவினர்

Sri Ganesan P G
‘Sri Gopala Gruham”, Plot .22, No.2,First St.,
AGs Colony,Puzhuthivakkam,Chennai 600 091.
Cell:9444055318
Email: appaiah55@gmail.com
Sri Seshadrinathan P K
Flat No.1, “SaravanaBhava”
9, 2nd Cross St, R A Puram,Chennai 600 028.
Cell:9841017884
Email: pksesh24@gmail.com
For electronic transfer (NEFT), details are:
Account Name: P K SESHADRINATHAN
SB Account No: 000901639983
Bank: ICICI Bank (Nungambakkam branch)
IFSC: ICIC0000009


Saturday, 24 October 2015

Pt. Bhimsen Joshi Child Prodigy Dr Balamurali Krishna

Pt. Bhimsen Joshi  and Dr. Balamurali Krishna both are Giants of their Days. This is a superb rendition of both and its fascinating to watch their program. Its a feast to our eyes, ears and mind. Sare Jehan sey Achha

Tuesday, 21 July 2015

Legendary Seshan
An Elegy

We have lost the Doyen of Economic &
Commercial Journalists
in the demise of P A Seshan
For Whom an Insightful Study of
Corporate Dynamics and Market Behaviour
Was a Veritable Passion
To Find the Like of Him
in the Present Day context is
Almost an Impossible Job
What is Fortunate for Us is to
Have been His Contemporaries
While over his Absence
We Continue to Sob
---P S Guruswami
Cell 9789960250


பாலாமடை பெற்ற மாமணி




திரு பி..சேஷன்
தோற்றம்: 07-07-1913    மறைவு: 09-07-2015
     
மீனாக்ஷி அம்மாள் அனந்தநாராயணய்யரின் அருந்தவப் புதல்வனே சேஷனே
உனை ஒருமையில் அழைப்பதால் அன்னியமாகவில்லை உனை எங்கள் அறியாமையால் அழைத்ததாக
 நீ நினைத்தாலும் பரவாயில்லை அகவை நூறு தாண்டினாலும்
நீ நிரந்தரம் என்றே நினைத்துவிட்டோம் ஏமாற்றிவிட்டாய் எங்களை

பன்முகம்
பத்திரிகையாளன்
உன் புறக் கண் போனாலும் உன் ஞானக்கண்ணால் உலகளந்தாய்
உன் பொருள் பொதிந்த எழுத்தால்  பல தொழில் முனைவோருக்கு வழிகாட்டினாய்
இந்தியப் பொருளாதாரம் ஏற்றம் பெற  இந்துபத்திரிகையில் பல பல பொருள் பற்றி
கட்டுரை கடை விரித்தாய் உன் பொருள் கொண்டவர் உயர்ந்தனர் அவர் தொழிலில்
தொழில் முனைவோர் உனை கலங்கரைவிளக்காய் ஏற்றனர்
அவர் அவர் தொழிலில் ஏற்றம் கண்டனர்
ஆசிய நாடுகளின் தொழில் வளர்ச்சிக்கட்டுரை   உனது கருத்திற்கு மணி மகுடம்
பங்கு சந்தை பற்றிய உனது அலசலுக்கு வாசகர் பலர் உண்டு
நீ சொல்லின் செல்வன்

கல்வியாளன்
எங்களில் முதியவன் நீ மூதறிஞனும் நீ எழுத்தரிவித்தவன் இறைவன் ஆவான்
எழுத்தரிவித்தலே சிறந்த சமுதாயப் பணி உன் முன்னோர்கள் தோற்றுவித்த பள்ளி
பத்தமடை ஸ்ரீ ராமசேஷ்ய்யர் மேல் நிலைப்பள்ளி
நூற்றி இருபது ஆண்டு தாண்டியப் பள்ளி
பலபல அறிஞரை உருவாக்கியப் பள்ளி அதன் கட்டிடங்கள் பழுதடைய காத்திராமல்
திட்டம் தீட்டினாய் புது புது வகுப்பறைகள் வார்த்திட வழி செய்தாய்
ஊர்கூடி தேர் இழுக்க பலரையும் அப்பணியில் பணித்தாய்
கட்டிடங்கள் வளர்ந்து திறப்பு விழா கண்டன உன் இச்சாதனைக்கு
ஒப்பாரும் மிக்காரும் இல்லவே இல்லை உனக்கு ஈடாய் ஒருவர் எப்பொழுது காண்போம்

வள்ளல்
கல்விக்கூடமா மருத்துவமனையா பொதுநலச் சேவை கேந்திரமா
அன்னதானமா வேலையில்லையா உடல் சுகவீனமா, ஏழைப் பெண்ணின்
திருமணமா, முதியோர் இல்லமா, வீட்டு வேலையாளா வாரிக்கொடுத்தாய் பிறர் அறியாமல்
அவர் தம் வாழ்வு ஒளி பெற இனி அவர்கள் எங்கு செல்வர்
நீ சென்றுவிட்டாய் உன் சூனியத்தை நிறப்ப யார் உளர்

பாலாமடை பொது ஜனம்
பார்த்தன் ஸ்தாபிக்க கந்தர்வர் பூஜிக்க மங்களாங்குரேஸ்வரர் உடன் உறை மங்களேஸ்வரி மைந்தனே நீலகண்டரின் வழித்தோன்றலே எங்கள் முதல்வனே நீ உழைத்தது போதும் என்று
மங்களேஸ்வரியின் மைந்தனே மங்களேஸ்வரியே உனை அழைத்துக் கொண்டுவிட்டாளா
அவள் கோயில் நிர்வாக பொருப்பை இனி ஏனையோர் பார்க்க
பொருப்பானவர் வசம் கொடுத்து விட்டாய் இனியும் எதற்கு இந்த பூத உடல்
இனி ஏன் இந்த பூவுலகம் என்று அவள் அழைத்துக்கொண்டாளா ஒன்றும் புரியவில்லை
பாலாமடை ஊருக்கு இனி பொருள் வழங்க யார் உளர் உனைப்போல்
கும்பாபிஷேகம் ஆகட்டும் திருக்கல்யாணம் ஆகட்டும் வருஷாபிஷேகம் ஆகட்டும்
ஆடிப்பூரம் ஆகட்டும் நவராத்திரி அம்பாள் கொலுதான் ஆகட்டும்
நீலகண்ட தீக்ஷிதரின் ஜெயந்தி ஆகட்டும் அவர் தம் ஆராதனை ஆகட்டும்
நம் குல குரு சங்கரரின் சங்கர மடம் ஆகட்டூம்
அனைத்துக்கும் பொதுக்கட்ட நிதி அளித்தாய்
கோயில் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அருசுவை அமுது செய்விப்பதில்
பேராவல் கொண்டவனே யார் உளர் போளி போட்டார்களா
ஆயாசம் தீர பாயாசம் ஊற்றினரா எவ்வளவு பேர் அமுது செய்தார்
எவ்வளவு வரவு எவ்வளவு செலவு எங்களை உன் கேள்வி எனும் கணை கொண்டு
தொலைபேசியில் தொடர்ந்து கணை தொடுத்தாய் உதவிக் கரம் நீட்டத்தான்
இனி யாரேனும் உளரா உன்னைப் போல் பாலாமடை  பரிதவிக்க
பராமுகமாய் சென்றுவிட்டாய் தோன்றினாய் புகழோடு தோன்றினாய்
மங்களாம்பிகை உனை மங்கா புகழோடு அழைத்துக் கொண்டாள்
சிவனாரை மனம் குளிரச் செய்து சிவபதம் அடைந்துவிட்டாய்

வாழ்க நின் பெயர் வாழ்க நின் புகழ் வாழ்க நின் கொற்றம்
வைய்யம் உள்ள மட்டிலும்
                                                                        -- பாலாமடை அப்பையா கணபதி