உ
பாலாமடை பெற்ற மாமணி
திரு பி.எ.சேஷன்
தோற்றம்: 07-07-1913
மறைவு: 09-07-2015
மீனாக்ஷி அம்மாள் அனந்தநாராயணய்யரின் அருந்தவப் புதல்வனே
சேஷனே
உனை ஒருமையில் அழைப்பதால் அன்னியமாகவில்லை உனை எங்கள்
அறியாமையால் அழைத்ததாக
நீ நினைத்தாலும்
பரவாயில்லை அகவை நூறு தாண்டினாலும்
நீ நிரந்தரம் என்றே நினைத்துவிட்டோம் ஏமாற்றிவிட்டாய்
எங்களை
பன்முகம்
பத்திரிகையாளன்
உன் புறக் கண் போனாலும் உன் ஞானக்கண்ணால் உலகளந்தாய்
உன் பொருள் பொதிந்த எழுத்தால் பல தொழில் முனைவோருக்கு வழிகாட்டினாய்
இந்தியப் பொருளாதாரம் ஏற்றம் பெற ’இந்து’ பத்திரிகையில் பல பல பொருள் பற்றி
கட்டுரை கடை விரித்தாய் உன் பொருள் கொண்டவர் உயர்ந்தனர்
அவர் தொழிலில்
தொழில் முனைவோர் உனை கலங்கரைவிளக்காய் ஏற்றனர்
அவர் அவர் தொழிலில் ஏற்றம் கண்டனர்
ஆசிய நாடுகளின் தொழில் வளர்ச்சிக்கட்டுரை உனது கருத்திற்கு மணி மகுடம்
பங்கு சந்தை பற்றிய உனது அலசலுக்கு வாசகர் பலர் உண்டு
நீ சொல்லின் செல்வன்
கல்வியாளன்
எங்களில் முதியவன் நீ மூதறிஞனும் நீ எழுத்தரிவித்தவன்
இறைவன் ஆவான்
எழுத்தரிவித்தலே சிறந்த சமுதாயப் பணி உன் முன்னோர்கள்
தோற்றுவித்த பள்ளி
பத்தமடை ஸ்ரீ ராமசேஷ்ய்யர் மேல் நிலைப்பள்ளி
நூற்றி இருபது ஆண்டு தாண்டியப் பள்ளி
பலபல அறிஞரை உருவாக்கியப் பள்ளி அதன் கட்டிடங்கள்
பழுதடைய காத்திராமல்
திட்டம் தீட்டினாய் புது புது வகுப்பறைகள் வார்த்திட
வழி செய்தாய்
ஊர்கூடி தேர் இழுக்க பலரையும் அப்பணியில் பணித்தாய்
கட்டிடங்கள் வளர்ந்து திறப்பு விழா கண்டன உன் இச்சாதனைக்கு
ஒப்பாரும் மிக்காரும் இல்லவே இல்லை உனக்கு ஈடாய்
ஒருவர் எப்பொழுது காண்போம்
வள்ளல்
கல்விக்கூடமா மருத்துவமனையா பொதுநலச் சேவை கேந்திரமா
அன்னதானமா வேலையில்லையா உடல் சுகவீனமா, ஏழைப் பெண்ணின்
திருமணமா, முதியோர் இல்லமா,
வீட்டு வேலையாளா வாரிக்கொடுத்தாய் பிறர் அறியாமல்
அவர் தம் வாழ்வு ஒளி பெற இனி அவர்கள் எங்கு செல்வர்
நீ சென்றுவிட்டாய் உன் சூனியத்தை நிறப்ப யார் உளர்
பாலாமடை
பொது ஜனம்
பார்த்தன் ஸ்தாபிக்க கந்தர்வர் பூஜிக்க மங்களாங்குரேஸ்வரர்
உடன் உறை மங்களேஸ்வரி மைந்தனே நீலகண்டரின் வழித்தோன்றலே எங்கள் முதல்வனே நீ உழைத்தது
போதும் என்று
மங்களேஸ்வரியின் மைந்தனே மங்களேஸ்வரியே உனை அழைத்துக்
கொண்டுவிட்டாளா
அவள் கோயில் நிர்வாக பொருப்பை இனி ஏனையோர் பார்க்க
பொருப்பானவர் வசம் கொடுத்து விட்டாய் இனியும் எதற்கு
இந்த பூத உடல்
இனி ஏன் இந்த பூவுலகம் என்று அவள் அழைத்துக்கொண்டாளா
ஒன்றும் புரியவில்லை
பாலாமடை ஊருக்கு இனி பொருள் வழங்க யார் உளர் உனைப்போல்
கும்பாபிஷேகம் ஆகட்டும் திருக்கல்யாணம் ஆகட்டும்
வருஷாபிஷேகம் ஆகட்டும்
ஆடிப்பூரம் ஆகட்டும் நவராத்திரி அம்பாள் கொலுதான்
ஆகட்டும்
நீலகண்ட தீக்ஷிதரின் ஜெயந்தி ஆகட்டும் அவர் தம் ஆராதனை
ஆகட்டும்
நம் குல குரு சங்கரரின் சங்கர மடம் ஆகட்டூம்
அனைத்துக்கும் பொதுக்கட்ட நிதி அளித்தாய்
கோயில் திருவிழாவிற்கு வந்த பக்தர்களுக்கு அருசுவை
அமுது செய்விப்பதில்
பேராவல் கொண்டவனே யார் உளர் போளி போட்டார்களா
ஆயாசம் தீர பாயாசம் ஊற்றினரா எவ்வளவு பேர் அமுது
செய்தார்
எவ்வளவு வரவு எவ்வளவு செலவு எங்களை உன் கேள்வி எனும்
கணை கொண்டு
தொலைபேசியில் தொடர்ந்து கணை தொடுத்தாய் உதவிக் கரம்
நீட்டத்தான்
இனி யாரேனும் உளரா உன்னைப் போல் பாலாமடை பரிதவிக்க
பராமுகமாய் சென்றுவிட்டாய் தோன்றினாய் புகழோடு தோன்றினாய்
மங்களாம்பிகை உனை மங்கா புகழோடு அழைத்துக் கொண்டாள்
சிவனாரை மனம் குளிரச் செய்து சிவபதம் அடைந்துவிட்டாய்
வாழ்க நின் பெயர் வாழ்க நின் புகழ் வாழ்க நின் கொற்றம்
வைய்யம் உள்ள மட்டிலும்
--
பாலாமடை அப்பையா கணபதி