Saturday, 14 February 2026

ஸ்ரீ Karpagambal - Sri Kapaleeswarar Thirukalyanam, Mylapore, Chennai, Tamilnadu, india

*மயிலையே கயிலை* *கயிலையே மயிலை* *ஸ்ரீ கற்பகம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் விவாஹம் மற்றும் உற்சவம் பங்குனி மாதம்* ஒரு விவாஹம் என்றால் அந்த விவாஹம் நடைபெறும் லக்கினத்தின் முஹூர்த்தம் நக்ஷத்ரம் முஹூர்த்த உதயாதி நாழிகையை இவ்வளவுக்கு மேல் இவ்வளவு நாழிகைக்குள் என்று பத்திரிகை எழுதுவதும் அதை ஒப்பு தாம்பூலம் மாற்றுவதற்கு முன்பும் கல்யாணத்திற்கு முன்பும் வீட்டு பெரியவர் அல்லது நன்கு வாசிப்பவர் வாசிப்பார். ( இப்பொழுது சில புரோகிதர்களே வாசிக்கும் வழக்கம் ஏற்பட்டுள்ளது.) ஸ்ரீ கற்பகம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் விவாஹம் பங்குனி மாதத்தில் நடக்க இருக்கிறது அதற்கு முன்னோடியாக *மாசி மாதம் லக்கின பத்திரிகை வாசிக்கப்படும்.* *இந்த நாள்* *26 பிப்ரவரி 2026 (குருவாரம்) அன்று மாலை 5:45 மணிக்கு மேல்* *"ஸ்ரீ கற்பகாம்பாள் சமேத ஸ்ரீ கபாலீஸ்வரர் பெருமானுக்கு"* *"விசேஷ மகா அபிஷேகம் மற்றும் திருக்கல்யாண லக்ன பத்திரிகை வாசித்தல் மற்றும் உள் பிரகாராத்தில் புறப்பாடு நடைப்பெறும்"* அனைவரும் வந்து கண்டு தரிசித்து இறைவனின் அருளை பெறவும். இந்த திருக்கல்யாண வைபவம் 10 நாட்கள் உத்சவமாக நடைபெறும். இது என் பால்யத்தில் மறக்க முடியாத நிகழ்வு அதிலும் நான்கு மாடவீதியிலும் ஸ்வாமியும் அம்பாளும் பவனி வரும் பொழுது வேத கோஷ்டி, பண்ணிசை, வாண வேடிக்கை, தலை சிறந்த நாதாஸ்வர கலைஞர்களும் மேளமும் கைலாயமாக காட்சி அளிக்கும். அப்பையா பாலாமடை

No comments:

Post a Comment