Sunday 23 June 2019

PALAMADAI ADIPOORAM FESTIVAL INVITATION


ஸ்ரீ மங்கள நாயகி சஹாயம்
மங்கலம் தரும் ஆடிப்பூரம்
அருள்மிகு மங்களேஸ்வரி ஸமேத மங்களாங்குரேஸ்வரர் திருக்கோயில், பாலாமடை (எ) ஸ்ரீ நீலகண்ட சமுத்திரம்
ஆடிப்பூரம் அனைத்து கோயில்களிலும் கொண்டாடப்படும் ஒரு முக்கிய பண்டிகை. அன்று பூமியில் வாழும் அனைத்து ஊயிர்களையும் காக்க தேவி சக்தியானவள் பூமிக்கு வருவதாக சொல்லப்படுகிறது. “ஆடிப்பட்டம் தேடி விதை” என்பது பழமொழி. பயிர்கள் செழித்து வளர விதை விதைக்க இந்த பருவம் ஒரு சிறந்த பருவம். மக்கட்பேறு இல்லாதவர்கள் அன்னையை இன்று ஆராதிப்பதால் அவர்கட்கு மக்கட்செல்வம் உண்டாகும்.
சக்தி ஸ்வருபமாகிய நம் மங்களேஸ்வரியை ஆடிப்பூரத்தன்று ஆராதிப்பது சகல் சௌபாக்கியங்களையும் தரும். இவ்வருடமும் பாலாமடையில் வழக்கம்போல் ஆடிப்பண்டிகை அன்னையின் அருளால் சிறப்பாய் கொண்டாடப்படும். ஆடிப்பண்டிகை என்பது நமது கலாசாரத்தின் ஒரு சிறப்பு.
பெரியாழ்வாரால் நந்தவனத்தில் துளசிச் செடி அருகில் இந்நாளில் ஆண்டாள் கண்டெடுக்கப்பட்டதால் இது அனைத்து வைணவ தலங்களிலும் ஒரு பெரிய விழாவாக உற்சவமாகவும், அதை தொடர்ந்து ஆண்டாள் கல்யாண உற்சவமும் கொண்டாடப்படுகிறது.

இந்த வருடம் ஆடிப்பெருக்கும் ஆடிப்பூரமும் ஒன்றாக வருவதால்
நாட்டின் நீர் வளம் பெருகும் திண்ணாமாய்
இந்த வருடம்  ஆடி மாதம் 18ம் தேதி (ஆகஸ்ட் 3ம் தேதி) சனிக்கிழமை வருவதால் இது வார விடுமுறை நாளாகவும் இருப்பதால் அனைவரும் பாலாமடை வந்திருந்து பெருந்திறளாக கலந்து கொண்டு ஸ்ரீ மங்களாங்குரேஸ்வரர் உடன் உறையும் அன்னை ஸ்ரீ மங்களேஸ்வரியின் அருளுக்கு பாத்திரராகும் படி பிரார்திக்கிறோம்.
பாலாமடை வருவதற்கு உங்கள் பிரயாண ஏற்பாட்டை செய்து கொள்ளுங்கள். அன்னை ஸ்ரீ மங்களேஸ்வரிக்கு சாற்றுவதற்கு வளையல், ரவிக்கை துணிகள், வரும் சுஹாசினிகளுக்கு, கன்னிப் பெண்களுக்கு, சிறிய பெண் குழந்தைகளுக்கு ஏதுவாக வாங்கி பாலாமடையில் அன்னைக்கு சாற்றியபின் வழங்குவது பாலாமடையில் வழக்கத்தில் உள்ளது. ஆகையால் அவரவர் இஷ்டப்படி கொண்டு வரவும். என்ன கொண்டு வர உத்தேசித்துள்ளிர், எவ்வளவு பேர் வருகை தர உள்ளிர்கள் என்பதை சிவமிகு ராஜாமணிபட்டர், திரு ரமணா, மற்றும் எனக்கும் தெரிவித்தால் திட்டமிட வசதியாக இருக்கும்.
பாலாமடை கிராம பொது ஜனங்கள்

No comments:

Post a Comment