Friday 29 September 2023

மஹாகவி நிலகண்ட தீக்ஷிதர் பவுண்டேஷன்

*ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும்* - *ஆசிரியர் திரு பி. எஸ். கிருஷ்ணன்*, *மூன்றவது பதிப்பு , 2023, மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் பவுண்டேஷன் வெளியிடு, விலை ரூ. 160/-.*

                                 *நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும்*

*புத்தக விமர்சனம்*

பா. கோ. கணேசன்

வாசகர்களால் இப்புத்தகம் பதிப்பிக்கப்பட்ட இரண்டு முறையும் மிகுந்த, வரவேற்பை பெற்றது. இப்புத்தகம் அச்சிடப்பட்டு பலகாலம் ஆகியது. இப்புத்தகம் இன்று பலர் வேண்டியதாலும் இன்றைய தலைமுறை வடமொழி இலக்கியங்கள் மேல் ஆர்வம் கொண்டுள்ளதாலும் மூன்றவது பதிப்பாக மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் அறக்கட்டளை மீண்டும் பதிப்பித்துள்ளது. 

 இந்நூலின் ஆசிரியர் திரு பி. எஸ். கிருஷ்ணன் அவர்கள் *மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர்* அவர்களுடைய சிறந்த படைப்புக்களை ஊன்றி படித்து அவருடைய ஒவ்வொரு படைப்பின் சிறப்பு அதன் ரசமான கவித்துவம், கவியின் ஆற்றாமை; வாழ்தல் வேண்டி, உழைத்து பெற்ற அறிவும் ஞானமும், கேவலம் அரசனின் நித்திரை கொள்ளும் நேரத்தில் சொல்லும் கதைகளுக்கு வீணாகிறதே என்ற ஆதங்கம் இவைகளை அழகாக இப்புத்தகத்தில் வடித்துள்ளார்.

கவியின் எண்ண ஓட்டம், அவர் பால்யத்தில்/யவ்வனத்தில்/முதுமையில் எப்பொழுது அந்த படைப்பு அவரால் உரு பெற்றிருக்க கூடும் என்பதை யூகித்து திரு பி. எஸ். கிருஷ்ணன் அவருக்கே உரித்தான சிறந்த நடையில் எழுதியுள்ளார்.

இந்நூல் மகா கவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் வாழ்ந்த காலத்தின் வரலாற்று பதிவு, இது உள்ளபடியே ஒரு ஆராய்ச்சி நூல். இந்த நூலினை ஊன்றி படித்து தங்கள் ஆராய்ச்சிக்கான தலைப்புகளை தேர்வு செய்து கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர் பலர்.

முடிவாக மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் என்ற ஒரு மஹா கவியின், ஒரு அரசியல் ஆசானின் வாழ்வியல் தத்துவத்தை, சமுதாய கண் கொண்டு பார்த்த ஒரு தீர்க்கதரிசியை, ஒரு பன்முகம் கொண்ட கவியை, பற்றி சிறப்பாய் *நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும்* என்ற புத்தகத்தில் திரு பி. எஸ். கிருஷ்ணன் நம் கண் முன்னே கொண்டுவந்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

                                                                 புஷ்கரமும் பாலாமடையும்

பா. கோ. கணேசன்

ஆசிரியர் உரை

இப்புத்தகம் ஒரு வரலாற்று பதிவாக (ஆவணமாக) புஸ்கரம் பற்றியும் பாலாமடை கிராமம் பற்றியும் செயதிகளையும் நிகழ்வுகளையும் பதிவு செய்ந்துள்ளேன். புஷ்கரம் 2018 அக்டோபர் மாதம் 11ம் தேதி முதல் 22ம் தேதி வரை திருநெல்வேலி மாவட்டத்திலும் குறிப்பாக பலாமடையிலும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. படித்துறை புனர்நிர்மாணம். தாமிரபரணி ஆற்று நீர் படித்துறையில் இசைவாய் வருவதற்கு செய்த பகிரத பிரயத்தனம், கோயில் உழவாரப்பணிகள், உணவுக்கூடம் விருந்தோம்பல் பொது சுகாதாரம் ஆகியவைகளை உள்ளது உள்ளபடியே பதிவு செய்ந்துள்ளேன்.

இராமாயண மகாபாரத இதிகாச புராணங்கள், மகாகவி காளிதாசர், எம கீதை, சங்க இலக்கியங்கள், மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரின் சிவலீலார்ணவம் தாமிரபரணியை எப்படி போற்றுகின்றன. மங்கள தீர்த்தத்தப்  படித்துறையின் மேன்மை, மஹாகவி நீலகண்ட தீக்ஷிதரின் ஜாதகம், அவரை வாழ்க்கை வரலாற்றில் சில முக்கிய பகுதிகள், தீக்ஷிதர் பாலாமடை வருகை, பாலாமடை நீலகண்ட சமுத்திரம் என்று அழைக்கப்படுவதற்கு ஆன கல்வெட்டு சான்று, சிருங்கேரி சாரதா பீடம் தக்ஷிணாம்னாய ஸ்ரீ அபிநவவித்யா தீர்த்தர் அருளிய தாமிரபரணி ஸ்லோகம், மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் ஜெயந்தி ஆராதனை பற்றி அவர் வழிகாட்டுதல்கள், அவர் அதிஷ்டானத்தில் காசிவிஸ்வநாதர் காசி விசாலாக்ஷி பிரதிஷ்டை பற்றிய செயதிகள்  இப்புத்தகத்தில் அடங்கும்பாலாமடையில் ஸ்ரீ சிருங்கேரி மடம் அமைந்த நிகழ்வு; அதில் நமது ஆச்சாரியார் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ பாரதி தீர்த்தர் ஸ்வாமிகளின் பங்கு, பாலாமடையில் இன்றுள்ள  நமது அரசு பள்ளி தோன்றியதில் நமது பலாமடை பெரியோர்களின் பெரிய பங்களிப்பு இப்புத்தகத்தில் உள்ளது. இதற்கு உழைத்தவர்கள் அரும்பணி நினைவுகூரப்பட்டுள்ளது. உதயனேரி பெருமாள், காந்திமதி சமேத நெல்லையப்பர் () அழகிய கூத்தர் கோயில் செப்பறை, அகிலாண்டேஸ்வரி சமேத அக்னீஸ்வரர் கோயில் இராஜவல்லிபுரம் பற்றிய வரலாற்று செயதிகழும் இப்புத்தகத்தில் உள்ளது. நாமும் நமது அடுத்து வரும் சந்ததியினரும் பாலாமடை பற்றி தெளிவாய் அறிந்து கொள்ளவும். இப்புத்தகம் உதவும்.

மஹாகவி நிலகண்ட தீக்ஷிதர் பவுண்டேஷன் மஹாகவி நிலகண்ட தீக்ஷிதர் படைப்புக்களை புத்தகங்களாக அவ்வப்பொழுது  வெளியிட்டு வருகிறது.

இன்று இருப்பவர் நாளை இல்லை என்பதை இன்று நிதர்சனமாக உணர்ந்திருக்கிறோம்எனது வேண்டுகோள் நமது மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் அவர்களுடைய சிறந்த படைப்புக்களை எல்லோரும் வாங்கி படித்து பயனுற வேண்டுகிறேன்

தீக்ஷிதர் வம்சத்தை சேர்ந்தவர்கள் கட்டாயம் அவரது படைப்புக்களை படிக்காவிட்டாலும் வீட்டில் பூஜை அறையிலாவது வைத்து புஜிக்க வேண்டும்அது வாழ்வில் மேன்மையை அளிக்கும். மேலும் உங்களது ஆதரவு அவர் படைப்புக்களை மேலும் பதிப்பிக்க உதவும்.

1. சிவ லீலார்ணவம்- விலை Rs.250/-*  மதுரையில் நிகழ்த்திய இறைவனது 64 திருவிளையாடல்களை விவரிக்கும் ஒரு நூல். முற்றிலும் சமஸ்க்ரித மொழியில் உள்ளது இதற்கு விரிவுரை தமிழில் இல்லை. 

2. கலி  விடம்பனம் - விலை ரூ. 45/-  மக்களின் மேல் உள்ள கலி பகவானின் தாக்கத்தை அழகாய் விவரிக்கும் ஒரு நூல். சமுதாய சிந்தனை, ஹாஸ்ய ரசம், விந்தை மனிதர், பிழைப்புக்காக பலர் கூறும்  பொய்கள் பற்றி 400 வருடங்களுக்கு முன்பே எழுதியுள்ளார். ஊன்றி படிக்கும் பொழுது சிரிப்போடு நமது சிந்தனையையும் தூண்டும் ஒரு நூல். கவிஞன் தனது நையாண்டி மற்றும் நகைச்சுவையால் மனித இயல்பு எப்போதும் ஒன்றுதான் என்பதை உறுதி செய்கிறார். இது பிரஞ்சு மொழியிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது இந்நூலின் சிறப்பு.

3. வைராக்கிய சதகம் - விலை ரூ. 90/-   தீக்ஷிதர் சிறந்த கல்வி அறிவு பன்முகப்பட்ட வாழ்நாள் அனுபவம், மேலும் தன்னை உணர்ந்த நிலையில் இப்புத்தகம் அவரால் படைக்கப்பட்டு இருக்க வேண்டும் என்பது திண்ணம். வைராக்ய லக்ஷணத்தின் மகத்துவம் மற்றும் வைராக்கியத்தை எவ்வாறு பெறுவது என்பது பற்றி இப்புத்தகம் விரிவாகக் கூறுகிறது.  

4. சபா ரஞ்சன சதகம் - Rs.90/-* மதுரை மன்னர் திருமலை நாயக்கரின் அவையில் அமைச்சராக இருந்த பொழுது எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இந்த புத்தகம் ஒரு ராஜ்ஜியத்தின் மேலாண்மை பற்றி பேசுகிறது. ஒரு நாடு எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும். அரசனுக்கு வழி காட்ட அரசவையில் சிறந்த குரு நல்ல அமைச்சர்கள், நீதி வழுவாது இருக்க தக்க சிந்தனையோடு வழிகாட்டும் வழிகாட்டிகள், கவிகள்  வேண்டும். மேலும் நாடு முன்னேற்றமடைய விவசாயம், ராணுவம், கல்வி, சுகாதாரம், கலைஞர்கள், இசை, நாடகம், நாட்டியம் போன்றவையும் அவசியம் வேண்டும். இப்புத்தகத்தில் இவை அனைத்தும் ஓர் உயர் தத்துவத்தின் அடிப்படையில் விவரிக்கப்பட்டுள்ளது.   

*5. ராமாயண ஸார ஸங்க்ரஹ ரகுவீரஸ்த்வம் -  Rs.60/-* வால்மீகி ராமாயணம் தவிர பல்வேறு ராமாயணங்கள் உள்ளன. ஸ்ரீ ராமபிரானின் சரிதத்தை, பரம பாகவதர்களான ஸ்ரீ துளசிதாசர் கம்பநாட்டாழ்வார் போன்றவர்களும் தங்கள்  கற்பனையுடன் ஒரு சில சிறு சிறு மாற்றங்களுடன் எழுதியுள்ளார்கள். சூர்யா புத்திரனான சுக்ரீவனால் அனுப்பப்பட்ட வானரங்கள் பல திக்குகளில்  தேடின ஆனால் ராமா நீ சிவாம்சமாக அவதரித்த ஹனுமனை அல்லவா  சீதையை தேடும் பொறுப்பை ஒப்படைத்தாய் என்று தீக்ஷிதர் தனக்கே உரித்தான முறையில் விவரிக்கிறார் இந்நூலை மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரும் பகவான் ஸ்ரீ ராமனை போற்றி துதிக்கும் வகையில் வசந்த திலகம் எனப்படும் விருத்தத்தில் படைத்துள்ளார்.

 6. புஷ்காரமும் பாலாமடையும் -  Rs.150/-*. பா. கோ. கணேசன்   முதல் பதிப்பு, 2019. தாமிரபரணியில் 144 ஆண்டுகளுக்கு ஒருமுறை மஹா புஷ்கரம் கொண்டாடப்படுகிறது, பாலாமடையில் எப்படி கொண்டாடப்பட்டது. மேலும் பாலமடை கிராமம் பற்றிய வரலாற்று உண்மைகள் மற்றும் பாலமடை கிராமத்தின் கர்ண பரம்பரை செவி வழி செய்திகள் கொண்டு தொடுக்கப்பட்ட ஒரு ஆவணம். பாலாமடை பெயர் காரணம், பாலமடை ஸ்ரீ நீலகண்ட சமுத்திரம் என்று அழைக்கப்படுவதற்கு உள்ள கல்வெட்டு செய்திகள் இந்த புத்தகத்தில் உள்ளது.  நாமும் நமது அடுத்து வரும் சந்ததியினரும் பாலாமடை பற்றி தெளிவாய் அறிந்து கொள்ளவும். இப்புத்தகம் உதவும்

P G Ganesan, 'Sri Gopala Gruham', 

Plot No.22, No.2, First Street, A G's Colony,

Puzhuthivakkam, Chennai 600091.India, Cell:- 9444055318, email id: appaiah55@gmail.com

 

With Best Wishes

Appaiah Ganapathy @ Ganesan P G

 

.   



No comments:

Post a Comment