Friday, 21 February 2025

Mahavi Sri Nilakanta Dikshithar

*ஸ்ரீ நீலக*மஹாகவி ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதர் பவுண்டேஷன் அறக்கட்டளைண்ட தீக்ஷிதர் (எ)  சின்ன தீக்ஷிதர் கிரந்தங்களை அவ்வப்பொழுது வெளியிட்டாலும்       ....அவர் சந்ததியினர் அப்புத்தகங்களை வாங்கி படித்து இந்த வெளியீடுகள் மேலும் வருவதற்கு ஆதரவு அளிக்க வேண்டும்.* நீங்கள் இந்த புத்தகங்கலை வாங்கி உங்கள் வீட்டு வரவேற்பு அறையில் காட்சிப்படுத்த வேண்டும்.

மஹாகவி *ஸ்ரீ நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும்* - *ஆசிரியர் திரு பி. எஸ். கிருஷ்ணன்*, மஹாகவி நிலகண்ட தீக்ஷிதர் பவுண்டேஷன் வெளியிடு, 2023, விலை ரூ. 120/-

 *புத்தக விமர்சனம்* 

*நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும்* 

வாசகர்களால் மிகுந்த வரவேற்பை பெற்ற, பதிப்பிக்கப்பட்ட இரண்டு முறையும் பெற்றாதாலும், அது ஆச்சிடப்பட்டு பலகாலம் ஆகியதாலும் இன்றைய தலைமுறை வடமொழி இலக்கியங்கள் மேல் ஆர்வம் கொண்டுள்ளதாலும் மூன்றவது பதிப்பாக புத்தகம் மீண்டும் பதிப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த முறை மஹாகவி நிலகண்ட தீக்ஷிதர் அறக்கட்டளையின் சார்பாக பதிப்பிக்கப்பட்டுள்ளது.

 *மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர்* அவர்களுடைய சிறந்த படைப்புக்களை ஊன்றி படித்து அவருடைய ஒவ்வொரு படைப்பின் சிறப்பு அதன் ரசமான கவித்துவம், கவியின் ஆற்றாமை, வாழ்தல் வேண்டி நமது உழைத்து பெற்ற அறிவும் ஞானமும், கேவலம் அரசனின் நித்திரை கொள்ளும் நேரத்தில் சொல்லும் கதைகளுக்கு வீணாகிறதே என்ற ஆதங்கம், கவியின் எண்ண ஓட்டம், அவர் பால்யத்தில்/யவ்வனத்தில்/முதுமையில் எப்பொழுது அந்த படைப்பு அவரால் உயிர் பெற்றிருக்க கூடும் என்பதை திரு பி. எஸ். கிருஷ்ணன் அவருக்கே உரித்தான சிறந்த நடையில் எழுதியுள்ளார். அவர் வாழ்ந்த காலத்தின் வரலாற்று பதிவு, இது உள்ளபடியே ஒரு ஆராய்ச்சி நூல். இந்த நூலினை ஊன்றி படித்து தங்கள் ஆராய்ச்சிக்கான தலைப்புகளை தேர்வு செய்து கொண்டு முனைவர் பட்டம் பெற்றவர் பலர். முடிவாக மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் என்ற ஒரு மஹா கவியின் ஒரு அரசியல் ஆசானின் வாழ்வியல் தத்துவத்தை சமுதாய கண் கொண்டு பார்த்த ஒரு தீர்க்கதரிசியை, ஒரு பன்முகம் கொண்ட கவியை பற்றி சிறப்பாய் *நீலகண்ட தீக்ஷிதரும் அவருடைய காவியங்களும்* என்ற புத்தகத்தில் திரு பி. எஸ். கிருஷ்ணன் வடித்துள்ளார் என்றால் அது மிகையாகாது.

 *மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர்* அவர்களுடைய சிறந்த படைப்புக்களை 

*மஹாகவி நீலகண்ட தீக்ஷிதர் அறக்கட்டளை*

( *Mahakavi Sri Nilakanta Dikshithars works are published periodically. Cobtact P G Ganesan +919444055318

No comments:

Post a Comment